உங்கள் வெற்றி பாதையில் அமைத்த தூண்கள் 

Pillars set in the path of your success

உங்கள் வெற்றி பாதையில் அமைத்த தூண்கள் 

தேனி மாவட்டத்தின் மாங்கனி , சுவைமிக்கது . அத்தகைய சுவைமிக்க சுற்றுபுறத்திலிருந்து நம் தோழியின் கதையை பார்க்கலாம் . தனக்கு பிடித்த மற்றும் தான் மகிழ வேண்டும் என்றில்லாமல் தன்னுடன் அனைத்து பெண்களும் அணிந்து , அழகு பார்த்து மகிழ வேண்டும் என்று பல வண்ண ரக ஆடைகளை விற்பனை செய்து வருகிறார் நம் தோழி திவ்யதர்ஷினி அவர்கள் . அவர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ளுவோம் வாருங்கள் .

என்னைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் நான் தேனி மாவட்டத்தில் பிறந்து , M.Sc Computer science வரை பயின்றேன் . அனைவரும் செல்லும் வேலையாக ஐடி வேலைக்கு சென்றேன் . ஆனால் செய்யும் செயலில் திருப்தி இல்லை . மேலும் பொது சேவையில் ஆர்வம் அதிகம் . திண்ணை மனிதவளம் மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் எட்டு வருடங்களாக Inner wheel club of Theni இல் உறுப்பினராக இருக்கிறேன் . JCI Theni Honey Bee யில் ஆண்டுதோறும் கொண்டாடும் " யாதுமானவளே " மகளிர் தின நிகழ்ச்சியை இரண்டு வருடங்கள் திறம்பட நடத்தினேன் .  

உங்கள் தொழிலின் தொடக்கமும் அதன் முன்னேற்றமும்

ஜவுளி உலகின் சக்கரவர்த்தி NSM silks இன் மற்றொரு புதிய பரிமானமாய் DD's fashions . என் தாத்தா மற்றும் தந்தை ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஜவுளி வணிகம் செய்தார்கள் . 2017 ஆம் ஆண்டு தொடங்கிய என் சிறு தொழில் மிகவும் வெற்றிகரமாக ஐந்து வருடங்களை கடந்து விட்டது . நாம் விற்பனை செய்வதோடு மட்டுமில்லாமல் வாடிக்கையாளர்களின் மனநிறைவை முதன்மை படுத்தி மகிழ்ச்சி அடைகிறேன் . தொடக்கத்தில் ரவிக்கைகள் மற்றும் அதன் லைனிங் துணிகள் மட்டும் விற்பனை செய்தேன் . நாட்கள் கடந்து பல வித துணிகளாக சுடிதார் material , நைட்டி , உள்பாவாடைகள் , புடவைகள் , குர்திஸ் , லெஹங்கா , பேண்ட் வகைகள் விற்பனை செய்து வருகிறேன் .

நீங்கள் பெற்ற விருதுகள் 

இந்த ஐந்து வருடங்களில் எனக்கு கிடைத்த விருதுகள் சில . என்னையும் என் தொழிலையும் ஊக்குவிக்கும் விதத்தில் Junior Chamber International ( JCI ) 2017 ஆம் ஆண்டு Ten Outstanding Young Person ( TOYP ) என்ற விருந்தலித்தது . 2018 ஆம் ஆண்டு Oustanding Lady Jaycee of the zone மற்றும் Outstanding LOM officer of the year 2018 என்ற விருதளித்து பெருமை படுத்தினர் . 

உங்கள் வெற்றி பாதையில் அமைத்த தூண்கள் 

நான் தொழில் தொடங்கிய நிலையில் இருந்து இன்று வரை பக்க பலமாக இருப்பது என் தாயார் மற்றும் என் குடுபத்தினர்கள். என் மகிழ்ச்சியினை அவர்களின் வெற்றியாக கொண்டாடுகிறார்கள் . அவர்களுடன் சேர்ந்து என்னை மிக தைரியமாக பேச வைத்து சமூக வலைதளங்களின் பயனும் , முறையும் கற்று தந்து , பல அறிமுகங்கள் , பல முன்னேற்றங்களை அமைத்து கொடுத்த Vera Level Business அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் . 

உங்களின் இலக்கு என்ன ? 

வீட்டில் ஒரு சிறிய அறையில் மட்டும் பொருட்களை வைத்து தொடங்கிய நிலையில் இன்று வீட்டின் அருகிலே ஒரு தனி இடத்தில் வணிகதிற்கு என்று தனியே இடம் ஒதுக்கப்பட்டு செய்து வருகிறேன் . என் அடையாளமான DD's fashions 

இன் அடுத்த படியாக அனைவரும் எளிதில் வர இயலும் முக்கிய சாலைகளில் ஒரு வணிகவளாகமாக DD's fashions யை அமைக்க வேண்டும் என்பது என் இலச்சியம் .