வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா குறித்து த.வெ.க. அரசு வீண் வதந்திகளை பரப்பக் கூடாது என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், வெளியிட்டுள்ள பதிவில், “அனைத்து மதங்களைச் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் (NGOs) வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும், "வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா (FCRA) - 2026 - விற்கு எதிராக, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது. தேவையற்ற விளம்பர நாடகம்.