2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர், ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 111 கிலோவும் தூக்கி மொத்தம் 198 கிலோ எடையை பதிவு செய்தார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மீராபாய் சானு தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு பளுதூக்குதலில் மீண்டும் பதக்கம் கிடைத்துள்ளது.