ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முனைப்புடன் களமிறங்குகின்றன. சொந்த மண்ணில் விளையாடும் தென்னாப்பிரிக்க அணிக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் இடையே விறுவிறுப்பான போட்டியை எதிர்பார்க்கலாம்.