நவ. 8
அக்னிசிறகு
அரசியல்

ஸ்ரீவில்லிபுத்தூர், திமுகவில் இணைந்த,7 பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள்

அக்னிசிறகு காப்பகம்

நிருபர் ·

0

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 7 அதிமுக கவுன்சிலர்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை இரவு திமுகவில் இணைந்தனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி , 5 நகராட்சி, 9 பேரூராட்சியைத் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. இந்தப் பேரூராட்சியில் திமுக கவுன்சிலர்கள் 7 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 7 பேரும், சிபிஐ 1 என வெற்றி பெற்றனர்.

சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்காக திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் மாறிமாறி தங்கள் பக்கம் இழுக்க முயற்சி எடுத்து வந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ் எஸ்ஆர்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் சுந்தரபாண்டியம் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் சிட்டிபாபு தலைமையில் 7 அதிமுக கவுன்சிலர்களும் திமுகவில் இணைந்தனர்.

இதனால் சுந்தரபாண்டியம் பேரூராட்சி 15-வார்டுகளையும் திமுக தன்வசப்படுத்தி உள்ளது.

Advertisement · 300 × 250

கருத்துகள்

ஏற்றுகிறது…

தொடர்புடைய செய்திகள்

முதல்வரின் பிரசாரத்தால் போக்குவரத்து கட்டுப்பாடு: “மக்களின் சிரமத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” – அண்ணாமலை
அரசியல்

முதல்வரின் பிரசாரத்தால் போக்குவரத்து கட்டுப்பாடு: “மக்களின் சிரமத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்” – அண்ணாமலை

39 நாட்கள் முன்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: முதல் அமைச்சர் விஜய் இன்று பிரசாரம்-5,000 பேருக்கு மட்டுமே அனுமதி...
அரசியல்

மதுராந்தகம் இடைத்தேர்தல்: முதல் அமைச்சர் விஜய் இன்று பிரசாரம்-5,000 பேருக்கு மட்டுமே அனுமதி...

44 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்

Demonstration on behalf of Bharatiya Janata Party across Tamil Nadu condemning the DMK government

1202 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

குன்னத்தூர் நகர் கழகச் செயலாளர் அதிமுக மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவரும்  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை இன்று சென்னையில்

Kunnathur Nagar League Secretary AIADMK Honorable Leader of Opposition Former Chief Minister Edappadi K. Palanichamy today in Chennai

1305 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

அதிமுக உறுப்பினர் சேர்க்கையின் மோதல் வெடித்தது! எம்.எல்.ஏ மீது தாக்குதல்

AIADMK membership conflict erupted! Attack on MLA

1308 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்

EWS: தினமும் ரூ.2,222 சம்பாதிப்பவர்கள் தான் ஏழைகளா? அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

``சமூகநீதி மண்ணான தமிழ்நாடு, சமூகநீதியைக் காப்பாற்றுவதற்கு உடனடியாக சில செயல்களை செய்தாக வேண்டும்." - முதல்வர் ஸ்டாலின்

1456 நாட்கள் முன்