தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்

தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்
தமிழகத்தில் நடப்பது பழனிசாமிக்கு தெரியவில்லை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் விமர்சனம்

சென்னை: தமிழகத்​தில் என்ன நடக்​கிறது என்​பதே தெரி​யாமல் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேசி வரு​வ​தாக அமைச்​சர் தா.மோ.அன்​பரசன் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: கடந்த 10 ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் தீர்க்​கப்​ப​டாத தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்​சினை​யில், திமுக அரசு பொறுப்​பேற்றதும் தமிழக முதல் வர் அவர்​களின் கோரிக்​கையை ஏற்று லைட்​டர்​கள் இறக்​கும​திக்கு தடை விதிக்​கு​மாறு 2022 செப்​.8-ம் தேதி மத்​திய வர்த்​தகத்​துறை அமைச்​சருக்கு கடிதம் எழு​தி​னார். தமிழக அரசின் தொடர் அழுத்​தத்​தால் மத்​திய அரசு 2023 ஜூன் 29-ம் தேதி ரூ.20-க்​கும் குறை​வான லைட்​டர்​கள் இறக்​கும​திக்கு தடை விதித்​தது.

இருப்​பினும், மற்ற நாடு​களில் இருந்து லைட்​டர்​கள், உதிரி​பாகங்​களாக, இந்​தி​யா​வுக்​குள் சட்ட விரோத​மாக கொண்டு வரப்​பட்​டு, லைட்​டர்​களாக பொருத்​தப்​பட்டு மீண்​டும் விற்​பனை செய்​யப்​பட்​டன. இதுகுறித்து மீண்​டும் மத்​திய அமைச்​சர்​களிடம் எடுத்​துரைக்​கப்​பட்டு கடந்​தாண்டு அக்​. 13-ம் தேதி இறக்​கும​திக்கு கட்​டுப்​ பாடு விதிக்​கப்​பட்​டது.

ரஷ்​யா, உக்​ரைன் போர், அமெரிக்கா பொருளா​தார கட்​டு​பாடு காரண​மாக பொட்​டாசி​யம் குளோரைடு இறக்​குமதி தடை செய்​யப்​பட்​ட​தால் தீப்​பெட்டி தொழில் பாதித்​தது. இதையடுத்​து, சென்னை பெட்ரோ கெமிக்​கல் மூலம் மொத்​த​மாக கொள்​முதல் செய்து தீப்​பெட்டி தயாரிப்​பாளர்​களுக்கு அரசு வழங்​கியது. பேர​வை​யில் இருந்து வெளிநடப்பு செய்​வதையே வாடிக்​கை​யாக கொண்ட எதிர்க்​கட்​சித் தலை​வருக்கு திமுக அரசின் நட வடிக்கை எல்​லாம் தெரிந்​திருக்க வாய்ப்​பில்​லை.

இதபோல் ரூ.6.42 கோடி அரசு மானி​யத்​துடன், ரூ.7.13 கோடி மதிப்​பீட்​டில் கடலை மிட்​டாய் உற்​பத்​திக்​கான பொது வசதி மையம் அமைக்க அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது. ஏப்​ரல் மாதம் இது பயன்​பாட்​டுக்கு வரும். குறு சிறு நடுத்தர தொழில் துறைக்கு அதி​முக ஆட்​சி​யில் ரூ.3,617.62 கோடி மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டது. திமுக ஆட்​சி​யில் கடந்த 5 ஆண்​டு​களில் மட்​டும் ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

ஆட்சி பொறுப்​பேற்று 4 ஆண்டு காலத்​தில் 5 சுய வேலை ​வாய்ப்பு திட்​டங்​களின்​கீழ் ரூ.2,057.90 கோடி மானி​யத்​துடன், ரூ.5,301.53 கோடி வங்​கிக் கடன் வழங்கி 63,014 புதிய தொழில் முனை​வோர் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளனர். தமிழகத்​தில் என்ன நடக்​கிறது என்​பதே தெரி​யாமல் எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேசி வரு​கிறார்​. இவ்​வாறு கூறி​யுள்​ளார்​.