மாநில அளவிலான கோ-கோ போட்டி: தியாகி என்.ஜி.இராமசாமி பள்ளி மாணவர்கள் வெள்ளி வென்று சாதனை!

திருச்சி: பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான 65-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இப்போட்டியில், நமது தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 17 வயதிற்குட்பட்ட மாணவர் அணியினர் கோ-கோ (Kho-Kho) விளையாட்டுப் பிரிவில் கலந்து கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு சிறந்த அணிகளுடன் போட்டியிட்ட இம்மாணவர்கள், தங்களது அபாரமான திறமையை வெளிப்படுத்தி இரண்டாமிடம் (Silver Medal) பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கும், நமது மாவட்டத்திற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளனர்.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. M.சிவா, திருமதி. R.கார்த்திகாபானு மற்றும் திரு. M.தினேஷ்குமார் ஆகியோருக்கும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.