ஆகஸ்டில் “சமய நல்லிணக்க ஆன்மீக மாநாடு” – சித்தர்கள் பேரரசு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கன்னியாகுமரியில் சித்தர்கள் பேரரசின் ஆலோசனைக் கூட்டம்

ஆகஸ்டில் “சமய நல்லிணக்க ஆன்மீக மாநாடு” – சித்தர்கள் பேரரசு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கன்னியாகுமரியில் சித்தர்கள் பேரரசின் ஆலோசனைக் கூட்டம் நிறுவனர் சங்கர்ஜி தலைமையிலும், துணைத் தலைவர் அல் அமீன் ஷாகுல் ஹமீத் முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சித்தர்கள் பேரரசின் தேசிய கொள்கைப் பரப்புச் செயலாளரும், பேராசிரியருமான முனைவர் சுபத்ரா செல்லத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமத்துவம், மனிதநேயம், சமய நல்லிணக்கம் மற்றும் சித்தர்கள் வாழ்வியல் தத்துவங்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

கூட்டத்தில், “சமய நல்லிணக்க ஆன்மீக மாநாடு” வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்கு முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டின் மூலம் அனைத்து மதங்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல், மனிதநேயச் சிந்தனைகளை வளர்த்தல், சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை நிலைநாட்டுதல், பெண்கள் முன்னேற்றம் மற்றும் சம உரிமையை வலியுறுத்துதல், இளைஞர்களிடையே ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தல், சித்தர்களின் வாழ்வியல் தத்துவங்களை சமூகத்தில் பரப்புதல், அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமூக நீதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழுக்களை அமைத்தல், பல்வேறு சமயத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை பங்கேற்க அழைப்பது தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் திரு. பிரதீப், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மைக்கேல் ராஜ், மகளிர் அணி தலைவி திருமதி ஞானசெல்வி, மகளிர் அணி துணைத் தலைவர் திருமதி முத்துலட்சுமி, கலைப் பாசறை தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.