வட போச்சே!

இது தான் உண்மையில் வட போச்சே கதை!!
????????????
மாப்ளே...
எங்க பெரியப்பா பைக்ல போயிட்டு இருக்கும்போது ஒரு இடத்துல எண்ணை சட்டியை வச்சி வடை பொரிச்சுக்கிட்டு இருக்கறதை பார்த்து திடீருன்னு பிரேக் அடிச்சி நின்னுட்டாரு...
????????????
பின்னாடியே வேகமா வந்த லாரி பெரியப்பாவை பைக்கோடு விட்டு தூக்கிடுச்சு...
????????????
ஐய்யய்யோ அப்புறம் என்ன ஆச்சு?
????????????
அப்புறம் எல்லோரும் அவர் கடைசியா ஆசைப்பட்ட வடையை வச்சி படைச்சு...
வடை பொரிச்ச எண்ணையை தொட்டு தலையில் வச்சு
சோலிய முடிச்சோம்....
????????????
பெரியம்மா கதறுறாங்க
"அவர் மெதுவாகத்தானே வண்டில போவாரு!"ன்னு...
????????????
மெதுவாத்தான் போவாரு... உண்மைதான் எல்லாரும் 80 கிலோ மீட்டர் வேகத்துல போகிற ஒரு ரோட்ல இவரு சென்டர் மீடியன் மாதிரி நடுரோட்டில் 20 கிலோ மீட்டர் ஸ்பீட்ல போனதும் இல்லாம வடை சட்டியைப் பார்த்து சடன் பிரேக் அடிச்சதுதான் பெரியப்பா பண்ணுன மிகப்பெரிய தப்பு...
விட்டு தூக்கிட்டானுங்க...
????????????
படிச்சவன் படிக்காதவன் வித்தியாசம் இல்லை எங்கேயாவது ரோட்டுல வடை பொரிக்கிறதை பார்த்தானுங்கன்னா மடாருன்னு நின்னுடுறானுங்க...
????????????
வடை போகல...
பெரியப்பாதான் போயிட்டாரு...
????????????