துருவ் விக்ரம் - கரண் அரவிந்த் குமார் கூட்டணியின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!
நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் #MythriTamil04 (#DV4) அதிகாரப்பூர்வமாக பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், முழுக்க முழுக்க கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை கரண் அகுமார் இயக்குகிறார். அவரே சபி உடன் இணைந்து திரைக்கதையையும் எழுதியுள்ளார். முதல் முறையாக துருவ் விக்ரமும், மைத்ரி மூவி மேக்கர்ஸும் இணைவதால் இந்தப் படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்திற்கு விக்னேஷ் ராஜகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். சியா படத்தொகுப்பை கவனிக்கிறார். பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பாளராகவும், ஜி.எம். சேகர் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். அதிரடி காட்சிகளுக்கு வி.எம். மோகன் (VM Mor) ஸ்டண்ட் இயக்குநராக இணைந்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தில் நடிகர்கள் பிரித்வி மற்றும் சாய் தீனா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் மற்ற நடிகர்கள், கதைக்களம், இசையமைப்பாளர் மற்றும் வெளியீட்டு தேதி உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பூஜை விழாவுடன் தொடங்கியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. துருவ் விக்ரமின் முதல் முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக இந்த படம் அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.


TharaRaj

