கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்... யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்... யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?
கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்... யார் யாருக்கு கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி?

****AGNISIRAGU****

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் இந்த கடன் திட்டம் வழங்கப்டுகிறது.

தமிழ்நாடு அரசின் (Tamil Nadu Government) கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், கறவை மாடு (Dairy Cows) வாங்குவதற்கான கடன் திட்டத்தையும் TABCEDCO செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் எவ்வளவு கடன் வழங்கப்படும், விதிமுறைகள் என்ன, தகுதிகள் என்ன, விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து இங்கு காணலாம். 

இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம் ஆகும். ஆனால் இதில் பயனாளிகளின் பங்கு 5 சதவீதம்தான்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு அதிகபட்சமாக ஒருவருக்கு எருமை உள்பட 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்படும். கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படும்

****AGNISIRAGU****