காவல் வாகனத்தில் போலீஸார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது 9 பிரிவுகளில் வழக்குப் பதிவு

காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது போலீஸார் மீது தாக்குதல் நடத்திய ரவுடிகள் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு வழக்குகள் தொடர்பாக ரவுடிகள் உள்பட 26 பேரை போலீஸார் புழல் சிறையில் இருந்து விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்துக்கு கடந்த 31-ம் தேதி அழைத்து வந்தனர். பின்னர், காவல் வாகனத்தில் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த வாகனத்தில் பாதுகாப்புக்காக பெண் போலீ ஸார் உட்பட 15 போலீஸார் சென்றனர். இந்நிலையில், வாகனத்தில் இருந்தவர்கள் திடீரென கூச்சலிட்டு பாட்டுப்பாடி போலீஸாரை கிண்டல் செய்து சீண்டினர்.
மேலும், வியாசர்பாடியில் வாக னம் செல்லும்போது வாகனத் தைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் காவல் வாகனத்தில் இருந்த தங்களது நண்பர்களுக்கு கஞ்சா பொட்டலத்தை வீசிவிட்டு அதிவேகமாக தப்பினார்.
இதை போலீஸார் கண்டித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த கைதிகளில் சிலர் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டினர். மேலும், கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு, கைதிகளில் ஒருவர் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினார். இதனால், காவல் வாகனத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே, காவல் வாக னத்தில் போலீஸாரை கைதிகள் மிரட்டியது மற்று மற்றும் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், போலீஸாரிடம் அத்துமீறிய கைதிகள் மீது 9 பிரிவுகளின் கீழ் வியாசர்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.