விமானத்தில் சக பயணியை கன்னத்தில் அறைந்த நபர்.. பதற்றத்தில் பயணிக்கு Panic Attack

இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா
உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது.
அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன் அகமது மஜும்தார் (32) மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கடந்த வியாழக்கிழமை அன்று இண்டிகோ விமானத்தில் மும்பையில் இருந்து கொல்கத்தா சென்றுகொண்டிருந்தார். கொல்கத்தாவில் இருந்து அசாமில் சில்சார் விமான நிலையம் செல்வதாக திட்டம்.
ஆனால் இண்டிகோ விமானத்தில் கொல்கத்தா சென்று கொண்டிருந்தபோது அவர் சக பயணியால் கன்னத்தில் அறையப்பட்டார்.
அகமது உடல்நிலை சரியில்லாத நிலையில் பயணம் மேற்கொண்டுள்ளார். விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்கள் அகமதுவை அவரது இருக்கைக்கு அழைத்துச் சென்றபோது திடீரென மற்றொரு பயணி அகமதுவை கன்னத்தில் அறைந்தார்.
உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்தனர். கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதற்கிடையே கொல்கத்தாவில் இருந்து சில்கார் விமான நிலையம் வர வேண்டிய அகமது காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். சில்கார் விமான நிலையத்தின் அகமதுவின் வருகைக்கு காத்திருந்த குடும்பத்தினர் அவர் வரவில்லை என்றும் செல்போன் மூலமும் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.