இமாச்சலப் பிரதேசம்: வெள்ளத்தால் இடிந்த அணை - அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் - வீடியோ

மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது
சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் குலு மாவட்டத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு அணை இடிந்து விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திடீர் மேக வெடிப்பு காரணமாக மலானா நதி கொந்தளிப்பாக மாறியது. வெள்ளத்தின் தீவிரத்தால் நேற்று, மலானா-I நீர்மின் திட்டத்தின் அணை முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த வெள்ளத்தில் மலானா தடுப்பணை முற்றிலுமாக அழிக்கப்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கார்கள், பாலங்கள் மற்றும் வீடுகள் காகிதப் படகுகள் போல அடித்துச் செல்லப்பட்டன.
சுமார் 30 பேர் வெள்ளத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் நான்கு முதல் ஐந்து தொழிலாளர்கள் நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இடம்பெயர்ந்த மக்கள் கைவிடப்பட்ட கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், உணவு, சுத்தமான தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) காவல்துறை மற்றும் உள்ளூர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர..