பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது எப்படி தெரியுமா?

வீடியோவிலும் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை
வீடியோ காட்சிகள் உட்பட 26 ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்தது.
கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் பிரஜ்வல் போட்டியிட இருந்த நிலையில் அவர் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளியாகின.
இதை தொடர்ந்து 47 வயதான வீட்டு பணிப்பெண் முன்வந்து புகார் அளித்தார். 2021 ஆம் ஆண்டு ஹாசனில் உள்ள கனிகடாவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இரண்டு முறையும், பெங்களூருவில் உள்ள ரேவண்ணாவின் குடும்ப இல்லத்தில் ஒரு முறையும் பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்..
மேலும் 4 பெண்கள் முன்வந்து பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரி பி.கே. சிங் தலைமையிலான விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸ் எதிர்கொண்ட முக்கிய சவால், பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான காட்சிகளை பிரஜ்வல் ரேவண்ணா படமாக்கினார் என்பதை நிரூபிப்பதாகும்.
ஏனெனில் எந்த வீடியோவிலும் பிரஜ்வலின் முகம் தெரியவில்லை. வீடியோவை படம்பிடித்த நபரின் கைகள் மற்றும் அந்தரங்க பாகங்கள் மட்டுமே தெரியும். மேலும் பாதிக்கப்பட்டவரின் முகம் தெரியும்.
வழக்கை நிரூபிக்க காவல்துறை முக்கியமாக பாரன்சிக் உயர் தொழில்நுட்பத்தை நம்பியிருந்தது. இந்த ஆய்வானது, வீடியோ எடுக்கும் நபரின் அந்தரங்க உறுப்புகளை அவரது உடலின் மற்ற பாகங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண்பதாகும்.
கைகள் மற்றும் பிறப்புறுப்புகளின் உடல் அம்சங்களைக் கண்டறிந்து ஒப்பிடுவது பல நாடுகளில், குறிப்பாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் பொதுவாக பயன்படுத்தும் நடைமுறையாகும்.
நீதிமன்ற அனுமதி பெற்று, பிரஜ்வலின் உடல் பாகங்களை புகைப்படம் எடுத்து வீடியோவில் காணப்படும் கைகள் மற்றும் பிறப்புறுப்புகளுக்கு இடையே 10 ஒற்றுமைகள் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
மேலும், வீடியோவில் உள்ள குரல் மாதிரியில் பிரஜ்வாலின் குரலுடன் ஒற்றுமையும் காணப்பட்டது. பின்னர் விசாரணை அதிகாரிகள் பிரஜ்வலின் பண்ணை வீடு மற்றும் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர்.
வீடியோவில் காணப்படும் காட்சிகள் இந்த இரண்டு இடங்களிலும் படமாக்கப்பட்டதையும் விசாரணைக் குழு கண்டறிந்தது.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் ஆடைகளில் காணப்பட்ட DNA மாதிரி பிரஜ்வலின் DNA மாதிரியை ஒத்திருந்தது.
வீடியோ பதிவு செய்யப்பட்ட தொலைபேசியை பிரஜ்வல் தனது ஓட்டுநரிடம் ஒப்படைத்திருந்தார். போலீசார் அதை மீட்டபோது, பிரஜ்வால் தானே வீடியோவை படமாக்கியிருப்பது தெரியவந்தது.
மேலும் வழக்கில் தடயவியல் சான்றுகள் வலுவாக இருந்தன. போலீஸ் சmarpithaவீடியோ காட்சிகள் உட்பட 26 ஆதாரங்களை நீதிமன்றம் ஆய்வு செய்து இறுதியில் அவர் குற்றவாளி என நேற்று தீர்ப்பளித்தது.
இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சத்தை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.