விமான நிலையங்களில் வேலை.. 1,446 பணியிடங்கள்.. எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ தகுதிதான்!

சென்னை: விமான நிலையங்களில் கிரவுண்ட் ஸ்டாஃப், லோடர்ஸ் ( Loaders) உள்ளிட்ட பணிகளை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1,446 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை 25 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது..
விமான நிலையங்களில் கிரவுண்ட் ஸ்டாஃப், லோடர்ஸ் (Loaders) உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை IGI Aviation Services நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது ஒரு தனியார் நிறுவனமாகும். நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிறுவனங்களில் பயணிகளுக்கான சேவை, விமான பராமரிப்பு, கிளீனிங் உள்ளிட்ட பணிகள் இந்த நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த நிலையில்தான் தற்போது காலியாக உள்ள 1,446 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்...
பணியிடங்கள் விவரம்:
Airport Ground sfaff: 1017
loaders: 429 என மொத்தம் 1,446 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி:
ஏர்போர்ட் கிரவுண்ட் ஸ்டாஃப் பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். லோடர்ஸ் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை கிரவுண்ட் ஸ்டாஃப் பணிக்கு ரூ.25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வழங்கப்படும்..
லோடர்ஸ் பணிக்கு ரூ.15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தவரை கிரவுண்ட் ஸ்டாஃப் பணிக்கு 18 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் லோடர்ஸ் பணிக்கு 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்..
பணியின் தன்மை:
கிரவுண்ட் ஸ்டாஃப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பயணிகள் செக் இன் நடைமுறை, ஏர்லைன் டிக்கெட் முன்பதிவு, போர்டிங் உள்ளிட்ட விமான நிலைய முனைய பணிகள் செய்ய வேண்டியிருக்கும். மூன்று ஷிப்ட்களாக பணி இருக்கும். லோடர்ஸ் பணியை பொறுத்தவரை லக்கேஜ், சரக்குகளை ஏற்றுதல் இறக்குதல், கேபின் கிளினீங், பணிமனையில் டெக்னிஷீயன்களுக்கு உதவியாக இருப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டியிருக்கும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு நடைபெறும். அதில் பெறும் மதிப்பெண்களை வைத்து தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுக் கட்டணமாக ரூ.350 செலுத்த வேண்டும். கிரவுண்ட் ஸ்டாஃப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.250 செலுத்த வேண்டும். தேர்வு மையங்கள் தமிழகத்தில், சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். https://igiaviationdelhi.com/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 21.09.2025 கடைசி நாளாகும். நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை படித்து உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்...