இன்றைய திருக்குறள்

திருக்குறள்
அறன் வலியுறுத்தல் அதிகாரம்
குறள் எண் :38
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்".
-திருவள்ளுவர்.
குறள் விளக்கம் :
ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.