இன்ஸ்டாகிராமை போல வாட்ஸ் அப்பிலும் விளம்பரம் - மெட்டா புதிய திட்டம்

இந்தியாவில் மட்டும் 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் சேனல் என்ற அம்சம் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
உலகளவில் பிரபலமான மெட்டா நிறுவனம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இயக்கி வருகிறது.
இந்தியாவில் மட்டும் சுமார் 35 கோடி பேர் பேஸ் புக்கையும், 50 கோடி பேர் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ் அப் வந்த ஆரம்ப காலத்தைவிட தற்போது பல்வேறு அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளம்பரங்கள் வருவதை போல் வாட்ஸ் அப் செயலியிலும் பயனாளர்கள் ஸ்டேட்டஸ் பார்க்கும் போது விளம்பரங்களை வெளியிட மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.