தானமாக இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. கிஃப்ட்டாக நீங்க இதை வாங்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடும்

தானமாக இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. கிஃப்ட்டாக நீங்க இதை வாங்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடும்
இதை வாங்காதீங்க.. வீட்டில் வறுமை வந்துடும்

சென்னை: குடும்பங்களில் பணப்பற்றாக்குறை தீர வேண்டுமானால், சில விஷயத்தை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.. குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களை யாருக்கு தர வேண்டும்? எந்த பொருட்களை தரக்கூடாது? எந்த பொருட்களை வீட்டில் வைத்திருக்கக் கூடாது? என்பது குறித்தெல்லாம் பெரியோர்கள் தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறார்கள்.. அதேபோல, குறிப்பிட்ட சில பொருட்களை மறந்தும் பிறருக்கு தானமாக கொடுக்கக் கூடாது, பரிசு பொருளாகவும் தரக் கூடாது என்பார்கள். இதுகுறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்

எப்போதுமே பெண்கள் வீட்டு வாசலில் கோலம் போடும்போது, தெற்கு திசையில் நின்று கோலம் போடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் அமாவாசை நாளிலும் சரி, திதி தரக்கூடிய நாட்களிலும்சரி, வாசலில் கோலம் போடக்கூடாது என்பார்கள்..

அதுமட்டுமல்ல, அமாவாசை நாட்களில் முட்டைக்கோஸ், நூக்கல், முள்ளங்கி, பீன்ஸ், கத்தரிக்காய், காலிஃபளவர், ப்ரோக்கோலி, பட்டாணி போன்ற காய்கறிகளை சமைக்கக்கூடாது.. வேறு எந்த கசப்பான உணவையும் தயாரிக்கக்கூடாது என்பார்கள்.

பெண்கள் மெட்டி

பெண்கள் எப்போதுமே காலில் மெட்டி அணிந்திருக்க வேண்டும். ஆனால், 3 மெட்டி அணிய கூடாது.. மாதவிடாய் நேரங்களில் தலைக்கு பூ வைக்க கூடாது.. அதைவிட முக்கியமாக, கோயிலில் பிரசாதமாக தருகின்ற துளசி இலைகளை தலையில் வைத்துக் கொள்ளவே கூடாது..

வீட்டிலுள்ள பொருட்களில் கூடுதல் கவனத்தை செலுத்தினாலே, நம்முடைய கஷ்டங்கள், சிக்கல்கள், இன்னல்கள் தீரும் என்பார்கள்.. வியாழக்கிழமை, திங்கட் கிழமைகளில் வீட்டை பெருக்கி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.. அடுப்பு மேடைகளை வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்யும் நாட்களில் கழுவிவிடக்கூடாது. துணிகளை துவைப்பதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுக்க கூடாது.

ஜாதகங்கள், கிரகங்கள்

எக்காரணம் கொண்டும், பூச்சிகள், கரையான், சிலந்திகள், ஒட்டடை போன்றவை வீட்டில் எந்த மூலையிலும் சேர்ந்துவிடக்கூடாது..

அதேபோல, ஒருவருக்கு தானம் தருவது நல்ல விஷயமாகும்.. பிறருக்கு தானம் செய்வது, ஜாதகத்திலுள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் சாதகமாக இருந்து அவர்களின் நிலையை உயர்த்தும் என்பது நம்பிக்கையாகும்.

அதேசமயம், தானம் செய்யும்போது சில விஷயங்களை கவனித்து செயல்பட வேண்டும்.. குறிப்பாக, தங்க நகைகளையும் யாருக்கும் தானமாக தரக் கூடாது... இதனால் குடும்பத்திலுள்ள பெண்களின் ஐஸ்வர்யம் குறைந்துவிடுமாம்

தானம் தரக்கூடாத பொருட்கள்

அதேபோல, மாலை 6 மணிக்கு மேல் வீட்டிலுள்ள வெள்ளை நிற பொருட்களை தானம் செய்யக்கூடாது. அரிசி, உப்பு, பால் போன்ற பொருட்களையும் தானம் தரக்கூடாது.. அப்படியே யாருக்காவது தர வேண்டுமானால், சாஸ்திரத்துக்கு சிறிதளவு ரூபாயை பெற்றுக் கொண்டு, அவைகளை தானம் வேண்டும்

.தானம் செய்வது மட்டுமல்ல, பிறருக்கு பரிசுப்பொருளை கொடுக்கும்போதுகூட, சிலவற்றை கவனிக்க வேண்டும்.. ஏனென்றால் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்பு இருக்கும்.. எனவே, நல்லெண்ணத்தில் பரிசு கொடுத்தாலும், நாம் தரக்கூடிய பொருட்களால் தாக்கங்கள் ஏற்பட்டுவிடும். இதனால் உறவும் கெட்டுப்போய்விடும்.

தவிர்க்க வேண்டிய பரிசு பொருட்கள்

கடிகாரம், பர்ஸ், செருப்புகள், முகம் பார்க்கும் கண்ணாடியை பிறருக்கு பரிசாக தரக்கூடாது.. கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தையும் தரக்கூடாது.. மீன் தொட்டி போன்று தண்ணீர் சம்பந்தமான பொருட்களையும் பரிசாக தரக்கூடாது.. மேலும் கறுப்பு நிற பொருட்களையும்

மேற்கண்டவற்றை நாம் பரிசாக தரக்கூடாது என்பது மட்டுமல்ல, பிறரிடமிருந்து இந்த பொருட்களை பரிசாகவும் பெற்றுக் கொள்ளக்கூடாது. அப்படி தருவதும் - பெறுவதும், குடும்பத்தில் வறுமையை தந்துவிடுமாம். உறவுகளையும் பிரித்துவிடுமாம்.