காதுகளில் இருக்கும் மெழுகை வலி இல்லாமல் நீக்க பட்ஸை பயன்படுத்தலாமா..? மருத்துவர் கூறும் அட்வைஸ கேளுங்க!!

காதுகளில் இருக்கும் மெழுகை வலி இல்லாமல் நீக்க பட்ஸை பயன்படுத்தலாமா..? மருத்துவர் கூறும் அட்வைஸ கேளுங்க!!
காதில் சேரும் மெழுகு, காதை தூசி, பாக்டீரியா மற்றும் வெளிப்புறத்திலிருந்து வரும் பிற அழுக்குகளிலிருந்து பாதுகாக்கிறது...

How To Clean Ear Wax | காதில் சேரும் மெழுகு, காதை தூசி, பாக்டீரியா மற்றும் வெளிப்புறத்திலிருந்து வரும் பிற அழுக்குகளிலிருந்து பாதுகாக்கிறது. அது மட்டுமல்லாமல், காது மெழுகு தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இருப்பினும், அது அதிகரித்தால், அது ஒரு பிரச்சனையாகும். வலி, அரிப்பு மற்றும் கேட்கும் பிரச்சினைகள் கூட ஏற்படலாம்.

பல நேரங்களில், காதுக்குள் இருக்கும் அழுக்குகள் அளவுக்கு அதிகமாகக் குவிந்து, நாம் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கத் தொடங்குகிறோம். இருப்பினும், காது மெழுகு நன்மைகளையும் கொண்டுள்ளது. காதில் சேரும் மெழுகு, காதை தூசி, பாக்டீரியா மற்றும் வெளிப்புறத்திலிருந்து வரும் பிற அழுக்குகளிலிருந்து பாதுகாக்கிறது. அது மட்டுமல்லாமல், காது மெழுகு தொற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கிறது. இருப்பினும், அது அதிகரித்தால், அது ஒரு பிரச்சனையாகும். வலி, அரிப்பு மற்றும் கேட்கும் பிரச்சினைகள் கூட ஏற்படலாம்...

காதுகள் சுத்தம் செய்யும் போது நாம் செய்யும் தவறுகள் குறித்தும் செய்யக்கூடாதவை குறித்தும் காது, மூக்கு, தொண்டை துறை மருத்துவர் முத்துக்குமார் கூறுவதை தெரிந்துகொள்ளலாம்...

காதினை இயற்கையாகவே பாதுகாக்கும் வகையில் செருமினோஸ் சுரப்பிகள் காணப்படுகின்றன. அவை காதினை வெளிப்புற தூசுகளில் இருந்து பாதுகாக்கின்றன. காது குரும்பி காதுகளில் காணப்படும் மென்மையான பகுதி. காதுகளுக்குள் நுழையும் அழுக்குகளில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றன. அத்தகைய காது குரும்பியில் ஊக்கு, பட்ஸ் போன்றவை படும் போது அவை பாதிப்புக்குள்ளாவதாக மருத்துவர் முத்துக்குமார் கூறியுள்ளார்...

இவ்வாறு இருக்கும் போது தேவையில்லாமல் நாம் உள்ளே செலுத்தும் இதுபோன்ற பொருள்களால் செவி குரும்பி அதிக அளவில் பாதிக்கப்படுவதோடு காது கேளாமல் போக கூட வாய்ப்புள்ளதாக மருத்துவர் கூறுகிறார். அதிலும் பருத்தி பஞ்சியிலான பட்ஸ்கள் காதுக்குள் அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவற்றை தவிர்ப்பது நல்லது எனவும் மருத்துவர் முத்துக்குமார் தெரிவித்தார்....

காதுக்குள் எறும்பு, பூச்சிகள் புகுந்தால் சில துளிகள் தேங்காய் எண்ணெய் ஊற்றுவதன் மூலம் அவை காதுகளுக்குள்ளேயே இறந்து விடும். சில நிமிடங்களுக்கு பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி தலையை சாய்த்தால் அவை வெளியேறி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். காது மிகவும் முக்கியமான உறுப்பு என்பதால் அதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை போய் பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். சுய மருத்துவம் காது கேளாமையை கூட ஏற்படுத்து விடும் எனவும் எச்சரித்துள்ளார்..