மனம் அமைதி பெற சில வழிமுறைகள்!

மனம் அமைதி பெற சில வழிமுறைகள்!
மனம் அமைதி பெற

 

(01) தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்கு பிரச்னைகள் வருகின்றன. அதில் தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள்.

(02) நல்ல மனிதர்களுடனும், அனுபவம் வாய்ந்த பெரியவர்களுடனும் ஆலோசனை கேளுங்கள்.

(03) ஒருபோதும் மூடர்களின் செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள். நல்ல மனிதர்களின் அனுபவஅறிவு நிறைந்தவர்கள் நட்பை இழந்துவிடாதீர்கள்.

(04) உங்கள் மனதை எது பாதித்தாலும் அதை

தொலைவில் வையுங்கள். நினைவில் கொண்டு வராதீர்கள்.

(05) வீட்டிலிருப்பவர்களுடனும், நண்பர்களுடனும் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனுடன் பேசுவதற்கு நேரம்

ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் இடையூறு செய்யும் எதுவானாலும் ஒதுக்கி தள்ளுங்கள்.

(06) எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரை பார்க்காதீர்கள். உங்கள் மனதில்கூட பாவ எண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள்.

நிம்மதியை யாருக்காகவும் இழக்காதீர்கள்.

(07) நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்புங்கள். ஒருவேளை மனதிற்கு பிடிக்காத சம்பவம் வந்தால் அது உங்களிடம் நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடை கொடுத்து அனுப்புங்கள்.

(08) வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம், அரசு ஆஸ்பத்திரி, முதியோர் இல்லம் சென்று உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். உடல் ஊனமுற்றோர் வேலை செய்யும் பொழுதும். கண்பார்வையற்றோர் அகர்பத்தி விற்கும் பொழுதும் இறைவன் உங்களை பூமியில் எந்தவிதமான குறையுமின்றி படைத்ததற்காக #நன்றி கூறுங்கள்.

(09) தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள

முற்படுங்கள். நேரத்தை விரயம் செய்யும்

எதையும் அனுமதிக்காதீர்கள். நேரத்தில்

உறங்கி, நேரத்தில் எழுங்கள்.

(10) உங்களை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும்

அளவு உங்கள் தோற்றம் இருக்கட்டும். ஒரு

செயலை ஆரம்பிக்கும் முன் முடிவை தெரிந்து

கொள்ளுங்கள். இதன் விளைவு எதில்கொண்டு சேர்க்கும் என ஆராயுங்கள். உங்களை புரிந்து மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.

(11) எல்லாம் உலகில் உங்களுக்கு பிடித்த மாதிரி நடக்கும் என எதிர்பார்க்காதீர்கள். இவ்வுலகில் எவ்விதத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது சில நேரங்களில் உங்களை ஏமாற்றத்தில் கொண்டு போய் நிம்மதியை இழக்க செய்துவிடும். செல்போனை தேவையானவற்றிற்கு மட்டுமே உபயோகம் செய்யுங்கள். வீணடிக்காதீர்கள்.

(12) எதிலும் நேர்மையாக இருங்கள். தர்மத்தின்

வழிப்படி நடக்க மறவாதீர்கள். இறைவனை சதாசர்வ காலமும் துணைவனாக வையுங்கள்.

மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும்

பேசாமல் இறைவனை நினைத்து அவனிடம்

மனம் விட்டு பேசிவிட்டு உங்கள் காரியத்தை துவங்குங்கள்.அமைதி உங்களின் நிரந்தர நண்பனாகிவிடும். 

இதுவே_சிறந்த வழி.