கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது: போலி ஆதார், ரேஷன் கார்டு பறிமுதல்

கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது: போலி ஆதார், ரேஷன் கார்டு பறிமுதல்
கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது: போலி ஆதார், ரேஷன் கார்டு பறிமுதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் விமானப் போக்​கு​வரத்து நிறு​வனம் ஒன்​றில் பணி​யாற்றி வந்​தவர் சாந்தா பால். பகுதி நேர​மாக மாடலிங் தொழிலிலும் ஈடு​பட்டு வந்​தார். இந்​நிலை​யில் போலி ஆவணங்​களை பயன்​படுத்தி இந்​தி​யா​வில் வசித்து வந்​த​தாக இவரை கடந்த செவ்​வாய்க்​கிழமை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: சாந்தா பால், கடந்த 2016-ல் ஆண்டு இந்தியா - வங்​கதேசம் இடையி​லான அழகிப் போட்​டியல் வங்​கதேசம் சார்​பில் பங்​கேற்​றார். 2019-ல் இவர் ஆசிய அழகிப் போட்​டி​யிலும் பங்​கேற்​றுள்​ளார். மாடலிங் துறை​யில் வெற்​றியை தொடர்ந்​து, அவர் நடிப்புத் தொழிலுக்கு மாறினார். இறு​தி​யில் வங்​கதேச விமான நிறு​வனம் ஒன்​றில் சேர்ந்​தார். இவர், கடந்த 2023-ல் வங்​கதேசத்​தின் பாரி​சாலில் இருந்து அந்​நாட்டு பாஸ்​போர்ட் மூலம் இந்​தியா வந்​தார். கொல்​கத்​தா​வில் ஒரு சொத்து முகவர் மூலம் அடுக்​கு​மாடி குடி​யிருப்பை வாடகைக்கு எடுத்​தார்.

முஸ்​லிம் இளைஞனை திரு​மணம் செய்​தது பெற்​றோருக்கு பிடிக்​காத​தால் பிரிந்து வாழ்​வ​தாக குடி​யிருப்பு உரிமை​யாளரிடம் கூறி​யுள்​ளார். வாடகை ஒப்​பந்​தத்​துக்​காக ஆதார், பான் கார்​டு, வாக்​காளர் அடை​யாள அட்டை போன்ற போலி இந்​திய ஆவணங்​களை கொடுத்​து உள்​ளார்.

மேற்கு வங்​கத்​தின் நாடியா மாவட்​டத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அவரது திருமண சான்​றிதழின்​படி ஆந்​தி​ராவை சேர்ந்த ஷேக் முகமது அஷ்ரப் என்​பவரை இவர் திரு​மணம் செய்​துள்​ளார். அஷ்ரப் வர்த்தக கப்​பல் நிறு​வனத்​தில் பணி​யாற்றி வரு​கிறார். இவரும் பிறகு கோல்ஃப் கார்​டன் பகு​திக்கு இடம்​பெயர்ந்து ஒன்​றாக வாழத் தொடங்​கினர்.

சாந்தா பால், உள்​ளூர் முகவர் ஒரு​வர் உதவி​யுடன் ரேஷன் கார்​டு,ஆதார் அட்​டை, வாக்​காளர் அட்​டை, பான் கார்டு உள்​ளிட்ட இந்​திய அடை​யாள ஆவணங்​களை அவர் போலி​யாக உரு​வாக்​கி​யுள்​ளார். அவரை வரும் 8-ம் தேதி வரை போலீஸ் காவலில் வி​சா​ரிக்க நீதி​மன்​றம்​ அனு​ம​தி வழங்​கி​யுள்​ளது. இவ்​வாறு போலீஸ் அதிகாரி கூறி​னார்​.