நல்லா பேசுவீங்களா? அப்போ இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. அழைக்கும் HCL.. ஆகஸ்ட் 4ல் இண்டர்வியூ

நல்லா பேசுவீங்களா? அப்போ இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.. அழைக்கும் HCL.. ஆகஸ்ட் 4ல் இண்டர்வியூ
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

சென்னை: சென்னை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். அனுபவம் தேவையில்லை. இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை அம்பத்தூரில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

நம் நாட்டில் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள எச்சிஎல் அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Fresher Voice Process பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான கல்வி தகுதிகள் பற்றிய முழு விவரம் வருமாறு:

இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் என்றால் 2025ம் ஆண்டில் எம்பிஏ, எம்ஏ, எம்எஸ்சி, எம்காம் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கடைசி செமஸ்டர் ரிசல்ட் இன்னும் வராத நிலை உள்ளது. இனால் ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்களும் இந்த இண்டர்வியூவில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி பிஇ, பிடெக் பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்தவர்கள், எம்எஸ்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பம் செய்ய வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்வோருக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பிரச்சனைகளை தீர்க்கும் திறன், முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி எந்த வகையான ஷிப்ட்டாக இருந்தாலும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும். இரவு பணிக்கும் தயாராக இருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி இருக்கும். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை என்பது வழங்கப்படும்.

பணியாளர்களுக்கு Cab வசதி உள்ளது. வீட்டில் இருந்து அலுவலகத்துக்கும், அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கும் ஊழியர்கள் Cab-ல் சென்று வரலாம். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை.

இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். இந்த பணிக்கான இண்டர்வியூ ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இண்டர்வியூ செல்வோர் மடிக்கணினி வைத்திருக்க அனுமதியில்லை..

இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் Face to Face முறையில் நடைபெறும். இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றயை தினம் HCL Technologies - AMB 6, South Phase, Ambattur Industrial Estate, 8, Madras, Thiruvallur High Rd, Ambattur, Chennai, Tamil Nadu என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் அம்பத்தூரில் உள்ள அதே அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here