குவியல் குவியலாக தங்கம்.. இதுதான் ரிசர்வ் வங்கியின் தங்க பெட்டகம்.. எவ்வளவு அள்ளினாலும் தீரவே தீராது

டெல்லி: நமது நாட்டில் உள்ள பொதுமக்கள் தங்கத்தை வாங்கி குவிப்பது அனைவருக்கும் தெரியும். பொதுமக்கள் மட்டுமின்றி ரிசர்வ் வங்கியும் கூட தங்கத்தை வாங்கி பாதுகாப்பான இடத்தில் சேமித்து வருகிறது. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் தங்கச் சேமிப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுமக்கள் மட்டுமின்றி உலக நாடுகள் மத்திய வங்கிகளுமே கூட தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. குறிப்பாக நமது ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளாகவே தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. இந்தியாவில் ரகசியமான இடத்தில் ரிசர்வ் வங்கி தங்கத்தைச் சேமித்து வைத்து வருகிறது. இதுவரை ரிசர்வ் வங்கியின் தங்கச் சேமிப்பு பெட்டகம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
ரகசியப் பொக்கிஷம்
இதற்கிடையே ரிசர்வ் வங்கி தனது தங்கக் கருவூலத்தை முதன்முறையாக பொது மக்கள் பார்வைக்குக் காட்டியுள்ளது. பிரபல ஓடிடி நிறுவனமான ஜியோ ஹாட்ஸ்டாரில் 'RBI Unlocked: Beyond the Rupee' என்ற புதிய ஆவணப்படத் தொடரில் வெளியாகியுள்ளது. அந்தத் தொடரில் தான் இந்த ரகசியப் பொக்கிஷம் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருக்கிறது
ஐந்து பாகங்களாக வெளிவரும் இந்த ஆவணப்படம், ரிசர்வ் வங்கியின் முக்கியமான செயல்பாடுகளை விளக்குகிறது. 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்தாண்டுடன் 90 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி தொடர்பாக மக்களுக்கு இதுவரை தெரியாத பல புதிய விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
12.5 கிலோ எடை
ஐந்து பாகங்களாக வெளிவரும் இந்த ஆவணப்படம், ரிசர்வ் வங்கியின் முக்கியமான செயல்பாடுகளை விளக்குகிறது. 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட ரிசர்வ் வங்கி, இந்தாண்டுடன் 90 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதனால் ரிசர்வ் வங்கி தொடர்பாக மக்களுக்கு இதுவரை தெரியாத பல புதிய விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் இந்தத் தங்கப் பெட்டகத்தில் தங்கம் செங்கல்லைப் போல அடுக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு தங்கச் செங்கல்லும் 12.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஒவ்வொரு செங்கல்லும் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. இதுபோல இந்தியாவிடம் சுமார் 870 டன் தங்க இருப்புகள் கைவசம் உள்ளது. ரிசர்வ் வங்கி ஏன் இந்தளவுக்குத் தங்கத்தை வாங்கி குவித்துள்ளது என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.
இதற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் அந்த ஆவணப் படத்தில் அளித்த விளக்கத்தில், "பொதுவாக எந்தவொரு நாடும் வளரலாம்.. விழலாம். பொருளாதாரங்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் தங்கம் எப்போதுமே தனது மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ளும்" என்கிறார்கள். அதாவது இக்கட்டான சூழல் ஏற்படும்போது அதைச் சமாளிக்கத் தங்கமே உதவும்