பட்டா மாறுதல் செய்யணுமா? அப்ப கட்டணம்? சொத்து அபகரிப்பை தடுக்க தமிழக அரசு எடுத்த சூப்பர் அதிரடி

சென்னை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியமாகும்.. இதற்கான வசதியை அரசு செய்துள்ள நிலையில், பட்டாவை ஆன்லைனில் எளிதாக எப்படி பெறுவது தெரியுமா? இதற்கான கட்டணம் எவ்வளவு? பட்டா சிட்டாவில் பெயர்களையும் ஆன்லைனில் மாற்ற முடியுமா? சொத்து அபகரிப்பு மோசடிகளை தடுக்க அரசு மேற்கொண்டுள்ள புதிய அதிரடி என்ன தெரியுமா? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
பொதுவாக, நிலப்பட்டா வாங்க வேண்டுமானால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலேயே செல்ல நேரிடும்.. இதற்காக நேரம் விரயமாகும். இடைத்தரகர்களின் தொல்லையும் அதிகமாக இருக்கும். எனவேதான், ஆன்லைனிலேயே தமிழ் நிலம் என்ற வெப்சைட்டை தமிழக அரசு துவங்கியிருக்கிறது
அதன்படி, ஒருவருக்கு சொத்து பதிவு செய்யப்படும்போது, வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய முடியும்.. பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்களும் ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதேபோல, இடம் அல்லது வீடு வாங்குவோரும் ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
பட்டாவில் நிலத்தின் சொந்தக்காரர் யார்? நிலத்தின் சர்வே எண்? நிலம் எந்த வகையை சேர்ந்தது? எந்த பகுதியில் அமைந்துள்ளது? என்பனவற்றையும் அறிந்து கொள்ளலாம்.
எந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் தேவையோ, அது உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா? என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிட்டால் போதும்... அந்தவகையில், தமிழ்நிலம் வெப்சைட்டில் எப்படி பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் தெரியுமா?