செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்த நல்ல செய்தி.. தரமான சம்பவம்.. அடுத்த 4 மாதம் ரொம்ப முக்கியம்!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வந்த நல்ல செய்தி.. தரமான சம்பவம்.. அடுத்த 4 மாதம் ரொம்ப முக்கியம்!
பொன்மகன் திட்டம் என்பது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டமாகும். இது ஆண் குழந்தைகளின் கல்விக்காக பெற்றோர்கள் சேமிக்க உதவும் ஒரு திட்டமாகும். இது அஞ்சல் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது

சென்னை: பெண்களுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் அடுத்த நான்கு மாதங்களுக்கு மாற்றப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் மாதம் முதல் தொடங்கி உள்ள காலாண்டிலும் தற்போதுள்ள வட்டி விகிதமே தொடரும்.

செல்வமகள் சேமிப்புத் திட்டம் - ஒரு அறிமுகம்

பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 22, 2015 அன்று செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டம் பெண்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, பெண்களின் உயர்கல்வி, திருமணம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது

.மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இது பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வட்டி மூலம் அதிக லாபம் கிடைப்பதால், பல பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இதன் விளைவாக, இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ₹ 11,16,815 வரை சேமிக்க முடியும்.