நாடு கடத்தப்படுவாரா எலான் மஸ்க்.. ட்ரம்ப் சொன்ன சூசக பதில்!

அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய கனவான ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) மசோதாவுக்கும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்கிற்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து, அந்த மசோதாவை எலான் மஸ்க் விமர்சித்து வருகிறார். இதன் காரணமாகவே அவர்களுக்குள் முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் குறித்து மோசமாக விமர்சித்த நிலையில், பிறகு அதிலிருந்து பின்வாங்கி எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார். அதை, ட்ரம்ப் பெரும்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. ”ட்ரம்ப் நிறைவேற்ற உள்ள வரி சீர்திருத்த மசோதா நாட்டுக்கு பெரும் சுமையாக அமையும் என்றும் அது மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால் தான் புதிய கட்சி தொடங்குவது உறுதி” என்றும் மஸ்க் கூறியிருந்தார்.