இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரும் நிலையில், மின்சார இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்குகிறது. யார் யார் விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழக அரசு மின்சார வாகனங்களை (EV) ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023 மற்றும் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மானியங்கள், வரிச் சலுகைகள் மற்றும் சார்ஜிங் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை அடங்கும். குறிப்பாக, டெலிவரி வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்படும் என்று 2025-26 பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதற்கு முன்பு அம்மா இரு சக்கர வாகனத் திட்டம் மூலம் பணிபுரியும் பெண்களுக்கு ரூ.25,000 வரை மானியம் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், மின்சார இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படுகிறது

மின்சார ஸ்கூட்டர் வாங்க மானியங்கள்

தமிழக மின்சார வாகனக் கொள்கை 2023ன் கீழ், மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு பல சலுகைகள் அறிவித்துள்ளது. குறிப்பாக உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல நலவாரியத்தில் (Tamil Nadu Platform Based Gig Workers Welfare Board) பதிவு செய்த தொழிலாளர்களுக்கு புதிய மின்சார ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இணைய அடிப்படையிலான சேவைகளில் உதாரணமாக உணவு டெலிவரி, பைக் டாக்ஸி ஆகிய சேவைகளில் ஈடுபடும் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்

.திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

மின்சார இருசக்கர வாகனத்தை மானியத்தில் வாங்க விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல நலவாரியத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். ரூ.20,000 மானியத்திற்கு விண்ணப்பிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் நல வாரிய பதிவு எண்ணை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கு பணிபுரியும் நிறுவனத்தின் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், ஆதார், முகவரி சான்று ஆகியவை தேவை. இ சேவை மையங்களுக்கு சென்றும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். நீங்கள் இதுவரை நலவாரியத்தில் உறுப்பினர் ஆகவில்லை என்றால், https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் New Registration மூலம் உங்களுடைய வேலை விவரங்கள் மற்றும் இதர தகவல்களை உள்ளிட்டு உறுப்பினர் 

தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் முக்கியத்துவம

தமிழ்நாடு தான் இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி மையமாக மாறி வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரூ.24,000 கோடி முதலீடு மற்றும் 48,000 வேலைவாய்ப்புகளை இந்தத் துறை ஈர்த்துள்ளது. ஓலா எலக்ட்ரிக், ஆதர் எலக்ட்ரிக் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி அலுவலகங்களை அமைத்துள்ளன. மேலும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் சார்ஜிங் நிலையங்களுக்கு 25% மானியம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது. நல வாரியத்தின் மூலம் வானகம் வாங்குவதை தாண்டி, பொதுமக்கள் மின்சார ஸ்கூட்டர் வாங்க மத்திய ரசின் FAME II மற்றும் மாநில அரசின் மானிய திட்டங்களை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம். உதாரணமாக ரூ.1,15,000 மதிப்புள்ள ஸ்கூட்டர் மானியத்துடன் ரூ.80,000 முதல் ரூ. 90,000 வரை குறையலாம்