மும்பை, பெங்களூர் எல்லாம் வியக்க போகுது.. சென்னையின் மையத்தில் வரப்போகும் பெரிய ப்ராஜெக்ட்! அசத்தல்

சென்னை: சென்னையில் அண்ணா சாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்பார்க்கப்பட்டதை விட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இங்கு அமைக்கப்படும் தூண்கள் கான்கிரீட் இல்லாமல் இரும்பு தூண்களாக இருப்பதால், தூண்கள் ஏற்கனவே எழுப்பப்பட்டுள்ளன.
இதனால், வரும் நாட்களில் பணிகள் விரைவாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்டச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இங்கு காணலாம்.
உயர்மட்ட சாலை திட்டம்
3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக உயர்மட்டச் சாலை அமைக்கப்பட உள்ளது. கீழே மெட்ரோ சுரங்கம் உள்ள நிலையில், அதற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் உயர்மட்டச் சாலை அமைக்கப்படும். பொறியியல் அதிசயம் என்று சொல்லும் விதமாக, மெட்ரோ சுரங்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த சாலை அமைக்கப்படவுள்ளது. இன்ஜினியரிங் அதிசயம் என்று அழைக்கப்படும் வகையில், பரபரப்பான அண்ணா சாலையில் 3.2 கி.மீ., நான்கு வழி உயர்மட்ட சாலைப் பணிகள் முடிந்தவுடன், தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை இடையே பயணிகள் 10 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பாலங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த சாலை ஒரு நீளமான பாலமாக அமைக்கப்பட உள்ளது
.
இந்த மேம்பாலத்திற்கான அடித்தளம் சாலை மட்டத்திலிருந்து ஏழு மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும். மேலும், இது சராசரியாக 20-28 மீட்டர் ஆழம் கொண்ட மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேலே அமைக்கப்படும். இது மெட்ரோ சுரங்கத்தை பாதிக்காது. இந்தியாவிலேயே முதல்முறையாக நிலத்தடி மெட்ரோ சுரங்கப்பாதை கொண்ட சாலையில் உயர்மட்ட தாழ்வாரம் கட்டப்படும். இந்த மேம்பாலம் வழியில் உள்ள முக்கிய சந்திப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள பேருந்து வழித்தடச் சாலைகளில் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், CMRL-இன் தலைமை பொது மேலாளர் பணிகளை மேற்கொள்வதற்குப் பல விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வகுத்துள்ளார். இதில், சுரங்கப்பாதையில் கட்டுமானக் கழிவுகள் வெளியேறாமல் இருப்பதை கண்காணிப்பதற்கான கருவி வேலைகளை நிறுவுவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அடங்கும்.
மெட்ரோ சுரங்கத்தை பாதிக்காது
மேலும், சி.எம்.ஆர்.எல்., மெட்ரோ நிலத்தடி கட்டமைப்புகள் மற்றும் மெட்ரோ பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரூ.500 கோடி காப்பீடு கோரி ஒப்பந்தம் செய்துள்ளது. ₹621 கோடி மதிப்பில் 3.5 கி.மீ., தொலைவு புதிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை பாலம் இருப்பதால், இடையில் நந்தனத்தில் நீண்ட நேரம் நிற்க வேண்டியதில்லை. இனி நந்தனம் சிக்னல் தொல்லை இருக்காது. அண்ணாசாலைக்கு இந்த சாலையைப் பயன்படுத்துபவர்கள், இனி அந்தப் பாலத்தில் சென்றால் ஐந்து சிக்னல்களில் நிற்க வேண்டியதில்லை. இந்த பாலத்தில் பயண நேரம் அதிகபட்சம் ஐந்து நிமிடம்தான். அதுவே கீழே சாலையில் சென்றால் பயண நேரம் 15 நிமிடமாகும். பீக் நேரங்களில் இதைவிடக் கூடுதலாக இருக்கும்
அண்ணா சாலையில் கட்டப்பட்டு வரும் இந்த உயர்மட்ட சாலை, சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஒரு முக்கிய திட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.