கவின் உடல் ஐந்து நாளைக்கு பின் சொந்த ஊரில் தகனம்

கவின் உடல் ஐந்து நாளைக்கு பின் சொந்த ஊரில் தகனம்
ஆறுதல் கூறிய கனிமொழி எம்பி

திருநெல்வேலி / தூத்துக்குடி: தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முக மங்​கலம் பகு​தியை சேர்ந்த பட்​டியலின சமூக இளைஞ​ரான மென்பொருள் பொறி​யாளர் கவின் செல்​வகணேஷ், கடந்த 27-ம் தேதி நெல்லை கே.டி.சி. நகரில் கொலை செய்​யப்​பட்​டார்.

இது தொடர்பாக, இவர் காதலித்​த​தாக கூறப்​படும் பெண்​ணின் சகோ​தரர் சுர்​ஜித் என்​பவரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவரது பெற்​றோ​ரான காவல் உதவி ஆய்​வாளர்​கள் சரவணன், கிருஷ்ணகு​மாரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டு, இரு​வரும் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர்.

ஆனால், இரு​வரை​யும் கைது செய்​தால் மட்​டுமே கவின் செல்​வ கணேஷின் உடலை வாங்கி அடக்​கம் செய்​வோம் என உறவினர்கள் போராட்​டம் நடத்தி வந்தனர். இந்​நிலை​யில், உதவி ஆய்​வாளர் சரவணன் நேற்று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டார். மேலும், இந்த வழக்கு தொடர்​பாக சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர்.

இதற்​கிடை​யில், அதி​காரி​கள் தொடர்ந்து நடத்​திய பேச்​சு​வார்த்தை காரண​மாக, கவின் செல்​வகணேஷ் உடலை பெற்​றுக்​கொள்ள அவரது உறவினர்​கள் சம்​ம​தித்​தனர். இதையடுத்​து, நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் வைக்​கப்​பட்​டிருந்த கவின் செல்​வ கணேஷ் உடல், அவரது தந்தை சந்​திரசேகர், தம்பி ப்ர​வீனிடம் 5 நாட்​களுக்கு பிறகு நேற்று காலை ஒப்​படைக்​கப்​பட்​டது.

அமைச்​சர் கே.என்​.நேரு, திருநெல்​வேலி ஆட்​சி​யர் ஆர்​.சுகு​மார், எம்​எல்​ஏக்​கள் அப்​துல்​வ​காப், ராஜா உள்​ளிட்​டோர் கவின் செல்​வ கணேஷ் உடலுக்கு மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தினர். இதையடுத்​து, கவின் செல்​வகணேஷ் உடல் சொந்த ஊரான தூத்​துக்​குடி மாவட்​டம் ஏரல் அரு​கே​யுள்ள ஆறுமுகமங்​கலத்​துக்கு கொண்​டு​வரப்​பட்​டது.

அவரது உடலுக்கு கனி​மொழி எம்​.பி. அமைச்​சர்​கள் பெ.கீ​தாஜீவன், அனிதா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன், ஊர்​வசி எஸ்​.அமிர்​த​ராஜ் எம்​எல்ஏ,தூத்​துக்​குடி மேயர் ஜெகன் பெரிய​சாமி, மாவட்ட ஆட்​சி​யர் க.இளம்​பகவத், எஸ்​.பி. ஆல்​பர்ட் ஜான், நாதக தலைமை ஒருங்கிணைப்​பாளர் சீமான், அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.சண்​முக​நாதன், ராஜலெட்​சுமி மற்​றும் பல்​வேறு கட்​சிகள், அமைப்​பு​களை சேர்ந்​தவர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்​னர், அவரது உடல் ஊர்​வல​மாக அரு​கே​யுள்ள மயானத்​துக்கு கொண்டு செல்​லப்​பட்​டு, தகனம் செய்​யப்​பட்​டது. இதையொட்​டி, போலீ​ஸார் பலத்த பாது​காப்பு ஏற்​பாடு​களை செய்​திருந்​தனர்​.

சுபாஷினிக்​கு சம்மன்: இதனிடையே, இந்த வழக்கு விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு கவின் காதலித்​த​தாக கூறப்​படும் சுபாஷினிக்​கு, சிபிசிஐடி போலீ​ஸார் சம்​மன் அனுப்பி உள்​ளனர்​.