திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதால் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இருக்காது: திருமாவளவன் நம்பிக்கை

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவதால் தொகுதி பங்கீட்டில் பிரச்சினை இருக்காது: திருமாவளவன் நம்பிக்கை
திருமாவளவன்

சென்னை: எங்​கள் கூட்​ட​ணி​யில் மேலும் சில கட்​சிகள் வந்து இணைவ​தால், தொகுதி பங்​கீட்​டில், பிரச்​சினை​கள் எது​வும் ஏற்படாது. அதை முதல்​வர் பார்த்​துக் கொள்​வார் என்று விசிக தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார். சென்னை அடை​யாறில் விசிக மாணவரணி சார்​பில் ‘மதச்​சார்​பின்மை காப்​போம்’ என்ற தலைப்​பில் நேற்று கருத்​தரங்கு நடை​பெற்​றது.

இதில் திரு​மாவளவன் பேசி​ய​தாவது: நாம் பேசுவது எத்​தகைய தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்​னும் பொறுப்பை உணர்ந்து பேசுவதே தலை​மைப் பண்​பு. தூண்​டி​விட்டு போய்​விடலாம். அது சாதி கலவர​மாக மாறி​விடும். அது துப்​பாக்​கிச்​சூடு வரை செல்​லக்​கூடும். அந்த பாதிப்​பு​கள் யாருக்​கும் நேர்ந்​து​விடக் கூடாது என்​னும் பொறுப்​புணர்வு தேவை.

தனக்கு அரசி​யல் ஆதா​யம் கிடைத்​தால் போதும், யார் எக்​கேடு கெட்​டால் என நினைக்​கக் கூடாது. நாட்​டுக்​கும் மக்​களுக்​கும் பாது​காப்பை உறுதி செய்​யும் பொறுப்​புணர்வு தேவை. தலை​மைப் பொறுப்பு சும்மா வந்​து ​வி​டாது. ஈர்ப்​பின் அடிப்​படை​யில் மக்​கள் திரளக் கூடும். அதை தக்க வைப்​பது சிரமம்.

ஈர்ப்பு இருக்​கும்: சினி​மா​வில் பிரபல​மான நடிகர்​கள் வந்​தால் சில காலம் ஈர்ப்பு இருக்​கும். ஆனால், தலை​மைப் பண்பு இல்லாவிட்​டால் ஈர்ப்பு இல்​லாமல் போய்​விடும். ஆவேச​மாக, கையை உயர்த்தி உணர்ச்​சிகர​மாக பேசும் பேச்​சாளர்​கள் இருக்கலாம். அவர்​களுக்கு பொறுப்பு இல்​லா​விட்​டால் தற்​காலிக​மாகவே நீடிக்க முடி​யும். நாம் பேசுவது எளிய மக்​களின் பாதுகாப்பை உறு​திப்​படுத்​து​வ​தாக இருக்க வேண்​டும்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் திரு​மாவளவன் கூறியதாவது: தி​முக கூட்​ட​ணி​யில், பல கட்சிகள் வந்து சேர இருப்​பதை மகிழ்ச்​சி​யோடு வரவேற்​கிறேன். முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் என்ன நோக்​கத்​தோடு, முதல்​வரை சந்​தித்து பேசி​னார் என்​பது எனக்​குத் தெரி​யாது.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி​விட்​ட​தால், அவருக்கு நல்ல காலம் பிறந்​து​விட்​டது என்று நம்​பு​கிறேன். எங்கள் கூட்​ட​ணி​யில் மேலும் சில கட்​சிகள் வந்து இணைவ​தால், எங்​களுக்​குள் தொகுதி பங்​கீட்​டில்​, பிரச்​சினை​கள்​ எது​வும்​ ஏற்படாது. அதை கூட்​ட​ணி​யின்​ தலை​வ​ரான முதல்​வர்​ ​பார்​த்​துக்​ கொள்​​வார்​. இவ்வாறு கூறினார்