கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் அபராத வட்டி, இஎம்ஐ வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஓபிஎஸ்

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் அபராத வட்டி, இஎம்ஐ வட்டிகளை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஓபிஎஸ்
ஓபிஎஸ்

சென்னை: கூட்​டுறவு வீட்டு வசதி சங்க உறுப்​பினர்​களின் அபராத வட்​டி, இஎம்ஐ வட்டி தள்​ளு​படி அறிவிக்க வேண்​டும் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: கூட்​டுறவு வீட்டு வசதி சங்​கங்​களில் நிலு​வை​யில் உள்ள கடனை வசூலிக்க அவ்​வப்போது அபராத வட்​டி, இஎம்ஐ வட்டி மற்​றும் இதர வட்​டிகளை தள்​ளு​படி செய்​யும் திட்​டம் தமிழக அரசால் அறிவிக்​கப்​படு​வது வழக்​கம். இதன்​மூலம் சங்க உறுப்​பினர்​கள் பயனடைந்து வந்​தனர். கடைசி​யாக 2023-ம் ஆண்டு இது​போன்ற வட்​டித் தள்​ளு​படிதிட்​டம் அறிவிக்​கப்​பட்​டது.

இந்​தத் திட்​டத்​தின் கீழ் 5,300 பேர் நிலு​வைத் தொகையை செலுத்​தி​விட்​டனர். ஆனால் அவர்​களுக்கு இன்​ன​மும் பத்​திரம் வழங்​கப்​பட​வில்லை என்​றும் கூறப்​படு​கிறது. இந்​தச் சூழலில், தற்​போது நிலு​வை​யிலுள்ள ரூ.1000 கோடி கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. ஆனால் நிலு​வைக் கடனை அபராத வட்​டி, இஎம்ஐ வட்டி மற்​றும் இதர வட்​டிகளு​டன் திருப்​பிச் செலுத்த சங்க உறுப்​பினர்​கள் தயா​ராக இல்​லை.

அனை​வரும் அபராத வட்​டி, இஎம்ஐ வட்டி உள்​ளிட்ட வட்​டித் தள்​ளு​படி திட்​டத்தை எதிர்​நோக்கி காத்​துக் கொண்​டிருக்​கின்​றனர். இதன் காரண​மாக, நிலு​வைத்தொகையை சங்க உறுப்​பினர்​களிட​மிருந்து வசூலிக்க முடிய​வில்​லை. அதனால் புதிய கடன்​கள் வழங்க இயலாத நிலை நில​வு​கிறது. இதன் விளை​வாக, பெரும்​பாலான சங்​கங்​கள் செயல்பட முடி​யாமல் முடங்​கிப் போயுள்​ளன.

கூட்​டுறவு வீட்டு வசதி சங்க உறுப்​பினர்​கள் கடன் சுமையி​லிருந்து விடு​பட​வும், சங்​கங்​களின் செயல்​பாடு​கள் சீராக இயங்​க​வும், புதிய கடன் வழங்​க​வும் வழி​வகை செய்​யும் வகை​யில், குறிப்​பிட்ட கால அளவுக்​குள் கடனைத் திருப்​பிச் செலுத்​தும் வகை​யில் அபராத வட்டி உள்​ளிட்ட வட்​டித் தள்​ளு​படி திட்​டத்​தினை தமிழ்​நாடு அரசு அறிவிக்​கும் என்று சங்க உறுப்​பினர்​கள் எதிர்​பார்த்​துக் கொண்​டிருக்​கிறார்​கள்.

கூட்​டுறவு வீட்டு வசதி சங்க உறுப்​பினர்​களின் எதிர்​பார்ப்​பின்​படி, அபராத வட்​டி, இஎம்ஐ வட்டி மற்​றும் இதரவட்டி தள்​ளு​படி திட்டத்தை அறிவிக்க வேண்​டும். ஏற்​கெனவே நிலு​வைத் தொகையை செலுத்​தி​ய​வர்​களுக்கு பத்​திரங்​களை விரைந்து வழங்க முதல்​வர் ஸ்டா​லின் நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.