உங்கள் குடியுரிமையையே ஒரு BLO அதிகாரி நீக்க முடியும்SIR வழக்கில்பாயிண்டை பிடித்த கபில் சிபல்

உங்கள் குடியுரிமையையே ஒரு BLO அதிகாரி நீக்க முடியும்SIR வழக்கில்பாயிண்டை பிடித்த கபில் சிபல்
ஒரு BLO அதிகாரி உங்கள் குடியுரிமையை ரத்து செய்யலாம்SIR வழக்கில்
உங்கள் குடியுரிமையையே ஒரு BLO அதிகாரி நீக்க முடியும்SIR வழக்கில்பாயிண்டை பிடித்த கபில் சிபல்

சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பல மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. SIR நடைமுறைக்கு சவால் விடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்தது. அக்டோபர் 28 அன்று அறிவிக்கப்பட்ட இந்தச் சிறப்புத் திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.

இந்த SIR நடைமுறைக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்துள்ளது. கடந்த விசாரணையில் வாக்காளர் பட்டியலை தீவிர சரிபார்க்கும் சிறப்புத் திட்டத்திற்கு

வாக்காளர் பட்டியல் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் இருந்தால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 23 இன் கீழ் ஆவணங்களைச் சரிபார்த்து கணக்கெடுப்புகளை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது என்றும் பக்னி தெரிவித்தார். BLO-க்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும், வரைவுப் பட்டியல்களை அணுகும்படி வைத்திருப்பது இதன் ஒரு பகுதி என்றும் அவர் மேலும் கூறினார்

எனினும், தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருந்தாலும், தற்போது பின்பற்றப்படும் நடைமுறை நியாயமற்றது மற்றும் exclusionary ஆனது என்று சிபல் தொடர்ந்து வலியுறுத்தினார். தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, இந்த செயல்முறை சரியானது என்று வாதம் வைத்தார்.

உள்ளாட்சித் தேர்தல்களுடன் SIR செயல்முறையை நடத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 90% க்கும் அதிகமான படிவங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுவிட்டதாகவும் திவேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார். SIR-ஐ எதிர்த்து வரும் அரசியல் கட்சிகள் களத்தில் தடைகளை ஏற்படுத்தி, படிவ விநியோகத்தைத் தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சில மனுதாரர்கள் சார்பாக ஆஜரான பிரசாந்த் பூஷன் எழுப்பிய, வேலைப்பளு காரணமாக BLO-க்கள் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள், நிறைய ஆவணங்களில் தஹ்வாரு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை திவேதி மறுத்தார். அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் அதிகாரப்பூர்வ பதிவில் இல்லை என்றும் அவர் கூறினார். கேரளாவில் SIR செயல்முறையை ஒத்திவைக்கக் கோரும் மனுக்களுக்கு விரிவான பதில்களை தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், கேரள தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கும் பதில்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 9 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.