அறம் சார்ந்த உணவுடன் நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கத்தின் நிறுவல் விழா
"அறம் சார்ந்த உணவு" என்ற தனித்துவமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நாகர்கோவில் சுப்ரீம் ரோட்டரி சங்கத்தின் 2026–27 ஆம் ஆண்டிற்கான பதவியேற்பு விழாவில், மாவட்ட ஆளுநர் காந்தி அவர்களின் ஆண்டு கருப்பொருளை முன்னிறுத்தும் வகையில், "அறம் சார்ந்த உணவு" என்ற தனித்துவமான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
2027–28 ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் எபனேசர் பென்சாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ( பொ ) திருமதி மேரி பிரின்சி லதா கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினர்களுக்காக, பாரம்பரியமும் ஆரோக்கியமும் இணைந்த "அறம் சார்ந்த உணவு" பரிமாறப்பட்டது. சுக்கு காபி, வடை, சம்பா இடியாப்பம், உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட ராகி, கம்பு, பாசிப்பயறு தோசைகள், கோதுமை வெஜ் பிரியாணி, முட்டை உணவுகள், வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு, காய்கறி கூட்டு, பழங்கள், காய்கறி சாலட், தயிர் சாதம் உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் இடம்பெற்றன.
இயற்கை சார்ந்த, பாரம்பரிய உணவுப் பழக்கங்களை மீட்டெடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கில் "அறம் சார்ந்த உணவு" என்ற இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் இந்த புதுமையான ஏற்பாட்டை வெகுவாக பாராட்டினர்.

நிகழ்ச்சியில் கிளப் சர்வீஸ் இயக்குநர் ரொட்டேரியன் பிரதாப், தலைவர் ரொட்டேரியன் முனைவர் சுபத்ரா செல்லத்துரை மற்றும் செயலாளர் ரொட்டேரியன் ஆனந்த் ஜெபஸ்டிஸ் ஆகியோரை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து உதவி ஆளுநர் ரொட்டேரியன் பத்மகிருஷ்ணன் புதிய தலைவர் மற்றும் செயலாளரை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
சமூக நலன், ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக, ரோட்டரி கிளப் ஆஃப் நாகர்கோவில் சுப்ரீம் தலைவர் ரொட்டேரியன் முனைவர் சுபத்ரா செல்லத்துரை தெரிவித்தார்.

இந்த புதிய முயற்சி, விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் ரோட்டரியின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.



