காலை உணவு திட்டத்துக்கு பொருட்கள் வாங்க அரசு நெருக்கடி: உதவி பெறும் பள்ளிகள் புகார்

நகராட்சி, பேரூராட்சிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான தட்டுகள், டம்ளர்கள், தரைவிரிப்புகளை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே வாங்குமாறு தமிழக அரசு கெடுபிடி காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் பசியின்றி கல்வி கற்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும் தமிழக முதல்வரின் காலை உணவுத்திட்டம் 2022 செப்.15 முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் கிராமப்புறங்களிலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதை அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதன் பின்னர் கிராமப் புறங்களிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.