அடேங்கப்பா இப்படியொரு வசதியா! WhatsApp-ல் அறிமுகமாகும் அசத்தலான அப்டேட்! செம்ம வரவேற்பு

வாட்ஸ்அப் செயலியானது தொடர்ந்து தங்களுடைய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வரிசையில் பயனர்கள் வேறுஎந்த வெளிப்புற செயலிகளையும் பயன்படுத்தாமல் வாட்ஸ்அப்பிலேயே டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்துகொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
app document scanner’ என்ற குறிப்பிடத்தக்க இந்த அம்சமானது, பயனர்களை வாட்ஸ்அப்பிலேயே டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து, அதனை PDF ஃபைலாகவும் மாற்றிக்கொள்ள வழிவகை செய்கிறது. மேலும் ஷேர் செய்வதில் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது.
புதிய அம்சத்தின் சிறப்பு என்ன?
புதிய அம்சம் ’இன்-ஆப் டாக்குமென்ட் ஸ்கேனர்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பேப்பர் டாக்குமெண்ட்டை புகைப்படம் எடுத்து, அதனை PDF ஃபைலாக மாற்றி, வாட்ஸ்அப்பில் உள்ள எவருக்கும் அனுப்ப உங்களை அனுமதிக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
* வாட்ஸ்அப்பில் document sharing என்ற பிரிவுக்கு செல்லவேண்டும்
* பின்னர் டாக்குமெண்ட் ஸ்கேன் என்ற டேப்பை பயன்படுத்த வேண்டும்
* அப்போது உங்கள் கேமரா ஆன் ஆகும்
பின்னர் பேப்பர் டாக்குமெண்ட்டை புகைப்படம் எடுத்தால் அதுவே PDF ஃபைலாக மாற்றிக்கொடுக்கும், பின்னர் அதனை மற்ற பயனர்களுக்கு அனுப்பிக்கொள்ளலாம்.
*அனுப்பப்படும் ஃபைல்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியுள்ளது, மற்றும் ஃபைல்களை அனுப்புபவர், பெறுபவர் இருவர் மட்டுமே பார்க்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிற செயலிகளை பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்பதால், இனி வாட்ஸ் அப்பிலேயே ஸ்கேன் செய்து பயனர்களுக்கு அனுப்பிக்கொள்ளலாம். விரைவில் செயலுக்கு வரவிருக்கும் இந்த அம்சம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.