அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கினர்:

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில்

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கினர்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் வருடந்தோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதே போல் இந்த ஆண்டும் குண்டம் பெருந்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் போன்றவை சங்கத்தின் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் , மாநில கெளரவ செயலாளர் தங்கவேல் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் சேகர், பிரியா மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் சம்பத், வேலுச்சாமி, மோகனப்பிரியா , அமுதா மற்றும் உறுப்பினர்கள் நடராஜ் , கீதா, பூங்கொடி, சாந்தி, லிங்கேஸ்வரி, ஜெயப்பிரியா, லட்சுமி, மோகன்ராஜ் , சரஸ்வதி,செர்ணா , விஜயக்குமார், ரமேஷ்குமார், நவீன் ராகேஷ், ராஜா என்கிற வெள்ளிங்கிரி, மாதேஸ், ஹரி, தமிழ்வாணன், ஜஸ்வந்த், தர்ஷன், தினேஷ், சுப்பிரமணி, கோபால் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்