அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முத்து மாரியம்மன் பூத் திருவிழாவில் நீர் மோர் வழங்கும் விழா:

நீர் மோர் வழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக முத்து மாரியம்மன் பூத் திருவிழாவில் நீர் மோர் வழங்கும் விழா:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கொன்னையூர் பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் பூத் திருவிழா வருடந்தோறும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதே போன்று இந்த வருடமும் மிக சிறப்பாக தொடங்கியது.

இந்த பூத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நீர் மோர் வழங்கும் விழா இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த விழா ஏற்பாடுகளை சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மகளிரணி கெளரவ தலைவர் திருமதி.சுசிலா செல்வராஜ் மிக சிறப்பாக செய்திருந்தார்.இந்த நிகழ்வில் உறுப்பினர்கள் மருத்துவர் ராமநாதன், ராம சேதுபதி , ஓய்வு காவல் உதவி ஆய்வாளர் கோபால் , விவேகானந்தா பள்ளி தாளாளர் மாஸ் மாதவன், சிவலிங்கம் , இன்ஜினியர் செல்வராஜ் , ரவிகுமார் , வேலுச்சாமி , துளசிதாசன் மற்றும் நாகராணி , பாக்கியலட்சுமி , மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.