பாரத மாதா நற்பணி அறக்கட்டளை வழங்கிய மருத்துவ நிதியுதவி ரூபாய் 5000

Medical Scholarship of Rs.5000 by Bharat Mata Charitable Trust

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் கோவை கருமத்தம்பட்டி-பதுவம்பள்ளியில் வசிக்கும் அன்பு தம்பதி திருமிகு சாந்தாமணி -செந்தில்குமார் ராஜா குடும்பத்தார் தங்கள் அன்பு மகன் 11- மாத கைக்குழந்தை மாஸ்டர் லுகேஷ் அவர்கள் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்திட பணம் இன்றி தவித்த நிலையில் அவர்களது ஏழ்மை நிலை கருதி குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய்.5000/- காசோலையாக வழங்கி (11-07-2023) உதவியது பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.இந்த நிகழ்வில் தன்னம்பிக்கை மாத இதழ் எழுத்தாளர் திரு.சுரேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு நிதியுதவியை வழங்கினார்.இந்நிகழ்வில் நிர்வாகிகள் M.கெளரி சங்கர்,K.இளங்கோ,ஆரோக்கியசாமி, திருமதி.பாப்பாத்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


குழந்தை லுகேஷ் இறைவன் அருளாலும் -தங்கள் பிராத்தனைகளாலும் நிச்சயம் விரைவில் நலம் பெறட்டும்