விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி ஐயாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க) நாள் 04.01.2026 இடம் நெடுஞ்சாலை நகர், சேலம்

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி ஐயாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாள் 04.01.2026 இடம் நெடுஞ்சாலை நகர், சேலம் (அ.தி.மு.க) பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ஐயா அவர்களை, 03.01.2026 அன்று சேலம் மாநகர் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவர்களது இல்லத்தில் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில பொருளாளர் கொண்டலாம்பட்டி எம். தங்கராஜ் அவர்கள், சங்க நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, விவசாயிகள் சங்கத்தின் காலண்டரை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார். இச்சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியும், விவசாயிகள் நலன் குறித்த பரஸ்பர கருத்துப் பரிமாற்றத்துடனும் நடைபெற்றது.