உளவுத்துறையில் வேலை பார்க்க ஆசையா? 4,987 பணியிடங்கள்.. சென்னையில் மட்டும் 285 பணியிடம்

உளவுத்துறையில் வேலை பார்க்க ஆசையா? 4,987 பணியிடங்கள்.. சென்னையில் மட்டும் 285 பணியிடம்
சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன

சென்னை: மத்திய உளவுத்துறையில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 4987 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சென்னையில் மட்டும் 285 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் உள்ளூர் மொழி தெரிந்து இருந்தால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.69 ஆயிர்ம வரை வழங்கப்படும். இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்..

ஐபி எனப்படும் மத்திய உளவுத்துறை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கிய அமைப்பாக ஐபி செயல்படுகிறது. உளவுத்துறையில் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் என்ற கனவு பலருக்கும் இருக்கும்.

பணியிடங்கள் விவரம்:

அத்தகைய கனவை நனவாக்கும் வகையில், அருமையான ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant (SA)/ Executive Posts) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்...

பாதுகாப்பு உதவியாளர் (Security Assistant (SA)/ Executive Posts)- மொத்தம் 4,987 பணியிடங்கள். 37 நகரங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 285 காலிப்பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:

1. அகர்தலா - 67

2. அகமதாபாத் - 307

3. ஐஸ்வால் - 53

4. அமிர்தசரஸ் - 74

5. பெங்களூரு - 204

6. போபால் - 87

7. புவனேஸ்வர் - 76

8. சண்டிகர் - 86

9. சென்னை - 285

10.டேராடூன் - 37

11. டெல்லி - 1124

12. காங்டாக் - 33

13. குவஹாத்தி - 124

14. ஹைதராபாத் - 117

15. இம்பால் - 39

16. இட்டாநகர் - 180

17. ஜெய்ப்பூர் - 130

18. ஜம்மு - 75

19. கலிம்போங் - 14

20. கோஹிமா - 56

21. கொல்கத்தா - 280

22. லே - 37

23. லக்னோ - 229

24. மீரட் - 41

25. மும்பை - 266

26. நாக்பூர் - 32

27. பனாஜி - 42

28. பாட்னா - 164

29. ராய்ப்பூர் - 28

30. ராஞ்சி - 33

31. ஷில்லாங் - 33

32. சிம்லா - 40

33. சிலிகுரி - 39

34. ஸ்ரீநகர் - 58

35. திருவனந்தபுரம் - 334

36. வாரணாசி - 48

37. விஜயவாடா - 115

ஆகிய நகரங்களிலும் காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பத்தாம் வகுப்பு கல்வி தகுதியுடன் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். அதாவது சென்னையில் உள்ள பணியிடத்திற்கு தமிழ் தெரிந்து இருப்பது அவசியம். வயது வரம்பை பொறுத்தவரை 17.08.2025 தேதிப்படி 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், பொதுப்பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

மத்திய அரசின் 7-வது ஊதிய கமிஷன் லெவல் 3 படி ரூ.21,700 - 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். முதல் கட்ட தேர்வு (Tier-I) ஆன்லைன் வழியில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வை பொறுத்தவரை எழுத்து தேர்வாக நடைபெறும். மூன்றாவது கட்டமாக நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, சேலம் , திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்..

விண்ணப்ப கட்டணம்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறை நன்கு படித்து தெரிந்து கொண்ட பின்னர் தேவையான தகுதிகள் இருந்தால் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிரார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.650 செலுத்த வேண்டும். Female/ST/SC/Ex-s/PWD பிரிவினருக்கு Rs.550/-கட்டணம் ஆகும். ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வுக்கட்டணம் செலுத்த முடியும். விண்ணப்பிக்க வரும் 17.08.2025 கடைசி நாளாகும்.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://cdn.digialm.com/EForms/configuredHtml.