சென்னை: சிறப்பு எஸ்ஐ கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் இருவர் கைது

சென்னை, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றியவர் ராஜாராமன் (54). இவர், கடந்த 18-ம்தேதி எழும்பூரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் மதுபான பாரில் மது அருந்தி விட்டு, வணிக வளாகம் முன்பு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நீலாங்கரையைச் சேர்ந்த ராகேஷ் (30), கண்ணகி நகரை சேர்ந்த ஐயப்பா (36) உள்பட 4 பேர் அங்கு வந்தனர்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் ரகேஷிடம், ராஜாராமன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில், ராகேஷ் உள்பட 4 பேரும் சேர்ந்து ராஜாராமனை கடுமை தாக்கி கீழே பிடித்து தள்ளி விட்டனர். இதில், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமாவில் இருந்த ராஜாராமன் கடந்த மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார்சென்னை, ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றியவர் ராஜாராமன் (54). இவர், கடந்த 18-ம்தேதி எழும்பூரில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் மதுபான பாரில் மது அருந்தி விட்டு, வணிக வளாகம் முன்பு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நீலாங்கரையைச் சேர்ந்த ராகேஷ் (30), கண்ணகி நகரை சேர்ந்த ஐயப்பா (36) உள்பட 4 பேர் அங்கு வந்தனர்.
வட்டிக்கு பணம் கொடுக்கும் ரகேஷிடம், ராஜாராமன் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில், ராகேஷ் உள்பட 4 பேரும் சேர்ந்து ராஜாராமனை கடுமை தாக்கி கீழே பிடித்து தள்ளி விட்டனர். இதில், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமாவில் இருந்த ராஜாராமன் கடந்த மாதம் 25-ம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக, எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து ராகேஷ், ஐயப்பா, நவோதித் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரை, போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த அரும்பாக்கம் துர்கா தெரு மணிவண்ணன் (42), செம்பியம் திரு.வி.க நகர் முருகேசன் ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.