இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
கபில தேவர்

 இன்னாநாற்பது 

 பாடல் எண் :07

"ஆற்ற லிலாதான் பிடித்த படையின்னா

நாற்ற மிலாத மலரி னழகின்னா

தேற்ற மிலாதான் றுணிவின்னா வாங்கின்னா

மாற்ற மறியா னுரை".

                                      -புலவர் கபில தேவர்.

விளக்கம்:

             வலிமையில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.