திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்

Demonstration on behalf of Bharatiya Janata Party across Tamil Nadu condemning the DMK government

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும்  பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும்
பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது அதன் ஒருபகுதியாக மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மதுக்கரை ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்தில் திமுக அரசு பொய் வாக்குறுதிகளை அனுதினமும் கூறி மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறது எனவும் நகைக்கடன் தள்ளுபடி ,
மின் கட்டண உயர்வு ,சொத்து வரி பல மடங்கு உயர்வு,தேங்காய் விலை சரிவு,


பெண்களுக்கு உரிமை தொகை வழங்குவதில் பாகுபாடு போன்ற அனைத்து விசயங்களிலும் திமுக அரசு மக்கள் மத்தியில் தோல்வியடைந்திருப்பதாகவும் ,மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்டுவதில்லை எனவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது ஆர்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் அப்பு,மாவட்ட செயலாளர் மோகன்ராஜ்,


MM குமரேஷ்.மகளிர் அணி தலைவி அருணாதேவி,விவசாய அணி ரவீந்திர குமார்,இளைஞரணி மதி போன்றோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்
ஆர்பாட்டத்தில் 800 க்கும் மேற்பட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.