ஆசையே துன்பத்திற்கு அறிகுறி

ஆசைகள் மனிதனை வாழ விடுவதில்லை. மனிதன் ஆசைகளை சாகவிடுவதில்லை. தேவையில்லாத ஆசைகளை மனதில் விதையாய் விதைத்தால், கஷ்டமும், வேதனையும் வெட்ட முடியாத மரமாக வளர்ந்து நிற்கும்.
தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், ஆசைப்பட்ட பிறகு அதை அடைய தன் தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதே தவறு. நீங்கள் தேவையில்லை என்று சிலர் ஆசைபடும் முன்பே அவர்களை விட்டு விலகி நிற்க கற்றுக்கொள்வது மிகச்சிறந்தது.
சிற்சில அவமானங்களால் பழகிய வாழ்வு,
சிற்சில ஏமாற்றங்களை
தாங்கிக்கொண்ட வாழ்வு,
சிற்சில இழப்புகளை ஏற்றுக்கொண்ட வாழ்வு,
சிற்சில ஏற்ற இறக்கங்களை
பார்த்து வந்த வாழ்வு.
சிற்சில புலம்பல்களை
சிற்சில விரோதங்களை
சிற்சில துரோகங்களை
சிற்சில புறக்கணிப்புகளை
சிற்சில வேதனைகளை
சிற்சில அழுகைகளை
எல்லாம் சேர்ந்த வாழ்வினை தான் நாம் வாழ்கிறோம்.
யாரும் விதி விலக்கு அல்ல.
எதுவும் சலுகைகள் அல்ல.
யாரும் தப்பித்தவர்கள் அல்ல.
யாவரும் அடிப்பட்டு சிக்கி திணறி எங்கேயாவது ஒளிக்கீற்று தெரியுமென நம்பி வந்தவர்கள் தான்.
உங்களுக்கும் தெரியும்.
ஒரு நாள் நிச்சயம் தெரியும்.
அதைப்பிடித்துக்கொண்டு கரையை நோக்கி நடந்திடலாமென
கவலைப்படாமல் இன்றைய நாளுக்கு ஆயத்தமாகுங்கள்.