உன்னுடன் நீ சண்டையிடுவதே சிறந்த போர்

உன்னுடன் நீ சண்டையிடுவதே  சிறந்த போர்
உன்னுடன் நீ சண்டையிடுவதே சிறந்த போர்

நாம் அனைவரும் ஒரே உலகில் தான் பிறக்கிறோம்..!

ஆனால்,

வளர வளர

எண்ணங்கள் 

நடத்தைகள் 

உணர்ச்சிகள் 

என இம்மூன்று இணைந்து

ஒவ்வொருவருக்கும்

தனித்தனி உலகை

உருவாக்கிக் கொண்டே வருகிறது.

அனைவரது உலகிலும்

இராஜா, இராணி, மந்திரி, தளபதி, சிப்பாய்கள் மற்றும் மக்கள் என அனைவரும் அடங்கிய

ஓர் மனக் கோட்டை ஒன்றை

கட்டி எழுப்பியிருப்பர்..!

கோட்டையொன்று கட்டினாலே

சண்டைக்கு தயாராக்கபடும்

உணர்வு பிறப்பது இயல்புதானே..?

சண்டை என்றாலே

மனம் பெரிதும் விரும்புவது

வெற்றி என்ற இராட்சியத்தைதான்

என்பதும் இயல்புதானே..?

இங்கு வெற்றி என்பது 

ஒவ்வொரு மனத்திற்கும்

வெவ்வேறு அளவீடுகளை கொண்டுள்ளது.

நேற்றைய உங்களை

இன்றைய உங்களுடன் சண்டையிட செய்யுங்கள்

அதில் வென்ற உங்களை

நாளைய உங்களிடம்

நாளைய போரில் பங்கேற்று

நாளைய உங்களை வெல்வதற்கு

உங்களை தயார் செய்யுங்கள்..!

நாம் எப்பொழுது,

வேறொருவர் உலகை பற்றி

சிந்திக்கின்றோமோ

அப்பொழுதே,

துன்புறத் துவங்கி

தோல்வியை நோக்கி துரத்தப்படுகிறோம்..!

எனவே,

உங்களது உலகில்

உங்களுக்கு நிகர் வேறு யாவரும் இல்லை என்ற சூட்சமத்தை அறிய முயன்று

நீங்கள் சண்டையிடத் துவங்கும் போரில் 

"பிறருடன் உங்களை ஒப்பீடு செய்ய துவங்கும்" போர் உத்தியை மட்டும்

அறவே கைவிடுங்களா

அப்போதுதான்,

உங்கள் உலகில் கட்டப்பட்ட

உங்கள் கோட்டையை செம்மைபடுத்த துவங்குவீர்..!

வேறு கோட்டையை

அழிப்பதாலும், கைப்பற்றுவதாலும் 

மற்றும் அதை பற்றி சிந்திப்பதால் மட்டும் வெற்றிக்கு வழி வருப்பது இல்லை,

அது உங்களுக்கு ஆசையையும்

அதனுடன் இலவசமாக பேராசையையுமே பெற்றுத்தரும்.

உங்கள் கோட்டையின் சுவரை பலப்படுத்துவதே

உண்மை வெற்றியை பெற்றுத் தரும்.