அதிமுக உறுப்பினர் சேர்க்கையின் மோதல் வெடித்தது! எம்.எல்.ஏ மீது தாக்குதல்

AIADMK membership conflict erupted! Attack on MLA

அதிமுக உறுப்பினர் சேர்க்கையின் மோதல் வெடித்தது! எம்.எல்.ஏ மீது தாக்குதல்

திருப்பூரில் அதிமுக உறுப்பினர் சேர்க்கையின் போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு, ஏற்பட்டு எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்ட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் குமார் நகரில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான ஆலோசனை கூட்டம் மாநகர மாவட்ட செயலாளரும், அதிமுக தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார், பல்லடம் தொகுதி எம்எல்ஏ எம்எஸ் ஆனந்தன், முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை அந்தந்த வார்டு செயலாளர்களிடம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 25வது வார்டு செயலாளரும் , கவுன்சிலருமான தங்கராஜிடம் உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கிய போது, அதே வார்டை சேர்ந்த அதிமுக நிர்வாகி பழனிச்சாமி என்பவர் தன்னிடம் படிவத்தை வழங்குமாறு கூறியதால், நிர்வாகி பழனிச்சாமிக்கும் - தங்கராஜுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதை அடுத்து சமரசம் பேச சென்ற முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எம் ஆனந்தனை பழனிச்சாமி தாக்க முயன்றார். மற்ற உறுப்பினர்கள் இருவரையும் தடுத்து பழனிச்சாமியை வெளியே அழைத்துச் சென்றனர். கூட்டத்தில் எற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனால் மாநகர மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.