வரிசையாக 8 அழகான பெண்களை திருமணம் செய்த ஒரே வீட்டில் வசித்து வரும் இளைஞர்!

The young man who lives in the same house who married 8 beautiful women in a row!

வரிசையாக 8 அழகான பெண்களை திருமணம் செய்த ஒரே வீட்டில் வசித்து வரும் இளைஞர்!

தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் 8 பெண்களை திருமணம் செய்து ஒன்றாக வசித்து வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த Ong Dam Sorot என்பவர் டாட்டூ கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் 8 பெண்களை வரிசையாக திருமணம் செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

இதில் என்ன அதிசியம் என்றால் 8 பெண்களுக்கு இடையில் எந்தவித சண்டை, பொறாமை போன்றவை எதுவும் வராதாம். Sorot 8 பெண்களை திருமணம் செய்த காதல் கதையை ஊடகம் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதாவது Sorot, தனது அனைத்து மனைவிகள் மீது அளவு கடந்த காதல் வைத்துள்ளாராம். 8 மனைவிகளை பார்த்த இடத்திலேயே அவரது மனதை பறிகொடுத்துள்ளார்.

அந்த வகையில் முதல் மனைவியை ஒரு நண்பரின் திருமணத்தில், இரண்டாவது மனைவியை மார்க்கெட்டில், மூன்றாவது மனைவியை மருத்துவமனையில் வைத்து சந்தித்துள்ளார்.

அதுபோல நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். 7வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போதும், எட்டாவது மனைவியை சுற்றுலா சென்ற இடத்தில் பார்த்துள்ளார்.

தற்போது இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். Sorot தனது அழகான 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரராகி வருகின்றது.