❤️ இரக்கமான ஒரு வார்த்தைகள்... கடந்த வாரம்...

❤️ இரக்கமான ஒரு வார்த்தைகள்...  கடந்த வாரம்...
❤️ இரக்கமான ஒரு வார்த்தைகள்...

*❤️ இரக்கமான ஒரு வார்த்தைகள்...

கடந்த வாரம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தேன. அப்போது திடீரென போக்குவரத்து காவலர் ஒருவரால் என் வண்டி நிறுத்தப்பட்டது.

அப்போது அந்தக் காவலர் என்னை ஒரு நிமிடம் பார்த்து, என்னாச்சு... Are you Okay என அக்கறையோடு கேட்டார். நான் அவ்வளவு அழுத்தத்தில் இருந்தபோது அந்தக் காவலர் அக்கறையுடன் கேட்ட அந்த வார்த்தையால், என் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

சில நாட்களாக நான் சேர்த்து வைத்த சோகங்கள் கண்ணீராக கொட்டியது. அந்த கண்ணீருக்குப் பின் நான் மிகவும் இலகுவாக உணர்ந்தேன். உடைந்துபோவது பரவாயில்லைதான்.

எப்போதாவது யாராவது கஷ்டப்படுவதை நீங்கள் கண்டால் உங்களின் இரக்கமான ஒரு வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். நாம் ஒருவருக்கொருவர் கணிவுடன் நடந்துகொள்வோம். வாரணம் ஆயிரம் படத்தின் விமான நிலைய காட்சியை ஒரு நிமிடம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்

ஜனனி பொற்கொடி என்பவரின் லிங்ட்இன் பதிவு வைரல்