கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : நிலம் வைத்திருப்பவர்களுக்கு புதிய குட் நியூஸ்!

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தில் அண்மையில் மூன்று தளர்வுகளை அறிவித்தது. இதன் மூலம் காலமுறை ஓய்வதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள் உள்ளிட்டோர் இனி இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.
இவர்கள் எல்லாம் ஜூலை 15 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். உரிய தகுதிகள் இருந்தால் அரசு அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும்
அதேநேரத்தில் இன்னும் சில தளர்வுகளும் ஏற்கனவே இருக்கின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக்கூடாது